உலகின் மிகப்பெரிய ஹோட்டல் டுபாயில் திறக்கப்பட்டது
அரேபிய தீபகற்பத்தில் அமைந்துள்ள, ஐக்கிய அரவு எமிரேட் நாட்டின் ஒரு நகர மாநிலமாக திகழ்வது துபாய் நகரம். இந்த துபாய் நகரம், உலகின் முதன் முதலாக தான் திகழ வேண்டும் என்று தீராப்பசி கொண்ட நகரமாகும். இது தனது முதன் முதல் பட்டியலில், அடுத்து 72 மாடிகள் கொண்ட அதி நவீன ஓட்டல் ஒன்றை சேர்த்துள்ளது.
உலக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இந்த 72 மாடி கொண்ட ஓட்டலை கடந்த செவ்வாய் அன்று முறைப்படி துபாய் திறந்துள்ளது. 355 மீட்டர் உயரமுள்ள உலகின் மிகப்பெரிய இந்த ஒட்டலின் பெயர் ஜே.டபிள்யூ. மரியட்ஸ் மார்கியூஸ் துபாய் ஆகும்.
இது உலகின் அதி உயர 828 மீட்டர் கட்டிடமான பர்ஜ் கலீப் கட்டிடத்தின் அருகிலேயே கட்டப்பட்டுள்ளது.

Post a Comment