நித்திரையிலிருந்த ஆப்கானிஸ்தான் இராணுவத்தினரை சுட்டுக்கொன்ற தலிபான்கள்
ஆப்கானிஸ்தான் நாட்டின் மத்தியக் கிழக்கில் அமைந்துள்ள காஸினி மாகாணம், தலிபான்கள் மற்றும் அல்கொய்தாகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இங்கு நேற்று போலீசார் தங்கியிருந்த இடத்திற்குள் மறைமுகமாக உட்புகுந்த தலிபான்கள், அங்கிருந்தோருக்கு மயக்கமருந்து கொடுத்திருக்கின்றனர்.
பின்னர் அவர்கள் மயங்கி தூங்கிக்கொண்டிருக்கையில், அனைவரையும் சுட்டுக்கொன்றுள்ளனர். பிறகு, அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இதில் 11 போலீசார் உள்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.
பின்னர் அங்கு வந்த காவலர்கள், சடலத்தை மீட்டு, கவனக்குறைவாக இருந்த காவலர்கள் இருவரை கைது செய்தனர். இந்த தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

Post a Comment