நாங்கள் அமெரிக்காவை அணுகுண்டால் தாக்கமுடியும் - வடகொரியா சொல்கிறது
சீனா அருகே உள்ள வடகொரியாவும், தென் கொரியாவும் பகை நாடுகளாக உள்ளன. தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவை மிரட்டும் வகையில் வடகொரியா சமீபகாலங்களாக ஆயுதங்களை தயாரித்து வருகிறது. வடகொரியா மண்ணில் இருந்து ஏவுகனை மூலம் அமெரிக்காவை தாக்குவதற்கு திட்டம் தயாரித்து ஏவுகணைகளை உருவாக்கி வருகிறது.
கடந்த டிசம்பர் மாதம் வடகொரியா ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியது. இந்த ஏவுகணை 10 ஆயிரம் கிலோமீட்டர் வரை பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
2 வாரங்களுக்கு முன்பு வடகொரியா அணுகுண்டு சோதனை ஒன்றையும் நடத்தியது. இந்த ஏவுகணை மூலம் அமெரிக்காவில் அணுகுண்டு தாக்குதல் நடத்த முடியும் என்று கருதப்படுகிறது.
இதுதொடர்பாக வடகொரியா அரசு இணையதளம் ஒன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதவாது:-
அமெரிக்காவின் மேற்கு கடற்கரை பகுதி மட்டுமல்ல அமெரிக்காவின் மையப்பகுதியிலும் எங்களால் அணுகுண்டு தாக்குதல் நடத்த முடியும். அந்த தொழில்நுட்பங்களை நாங்கள் பெற்றுவிட்டோம். எங்களிடம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையும், அணுகுண்டும் இருக்கிறது. ஆயுத பலம் உள்ள சுதந்திர நாடாக நாங்கள் இருக்கிறோம். எந்த நாடாலும் எங்களை அச்சுறுத்த முடியாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment