Header Ads



சௌகத் அலி மீது துப்பாக்கிச்சூடு - பிரிட்டன் கண்டனம்


பிரித்தானியக் குடியுரிமைபெற்ற சண்டேலீடர் வார இதழின் புலனாய்வு ஊடகவியலாளரான, பரஸ் சௌகத்அலி சுடப்பட்டதற்கு பிரித்தானியா கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக மற்றும் கொமன்வெல்த் விவகார அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட், கடும் அதிர்ச்சியும், ஆழ்ந்த கவலையும் வெளியிட்டுள்ளார். 

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும், சாத்தியமான எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்வதாகவும், அலிஸ்ரெயர் பேர்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். 

“பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருடன் இணைந்து நாமும் பிரார்த்திக்கிறோம்.  எமது தூதரக அதிகாரிகள் மருத்துவமனைக்குச் சென்று அவரைப் பார்வையிட்டனர்.  தேவைப்பட்டால், அவருக்கு மேலதிக உதவிகளை வழங்கத் தயாராகவே உள்ளோம்.  அதிகாரிகள் உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் கேட்டுக் கொள்வதாகவும்,” அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.