பேஸ்புக் மீது தாக்குதல்
பேஸ்புக் என்ற இணையத்தளம் இன்று உலக புகழ் பெற்ற மிகப் பிரபலமான இணையத்தளமாகும். இந்த இணையத்தளத்தில் உலகம் முழுவதிலும் இருந்து பல கோடி மக்கள் தங்கள் பர்சனல் தகவல்களை பதிந்துள்ளனர். இந்த நிலையில் இதுபோன்ற பர்சனல் தகவல்களை குறி வைத்து பேஸ்புக்கின் கம்ப்யூட்டரில் சைபர் அட்டாக் நடத்தப்பட்டு உள்ளது.
பேஸ்புக்கின் கம்ப்யூட்டரில் மால்வேர் (பிறரது கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களை அவருக்கு தெரியாமலேயே திருடி எடுத்து செல்லும் சாப்ட்வேர்) இருப்பதை கண்டறிந்தனர். உடனே சுதாரித்துக்கொண்ட பேஸ்புக் நிறுவனம் அந்த மால்வேரை அகற்றும் முயற்சியில் இறங்கியது. ஆனால் பேஸ்புக்கில் இருந்து தனிப்பட்ட நபர்களின் தகவல்கள் களவாடப்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்த சைபர் அட்டாக் குறித்து அமெரிக்க உளவு நிறுவனம் விசாரித்து வருகிறது. இன்று உலக நாடுகள் முழுவதும் பயப்படும் ஒரு விஷயம் சைபர் அட்டாக் . அமெரிக்க , ஈரானின் அணுஉலை குறித்த தகவல்களை திருட சைபர் அட்டாக் மேற்கொண்டது. தனக்கு எதிராக செயல்படும் அமெரிக்காவின் நடவடிக்கைகளை தெரிந்துகொள்ள சீனா ராணுவம் அமெரிக்க மீது சைபர் அட்டாக் மேற்கொண்டது. மொத்தத்தில் கம்ப்யூட்டரில் வைக்கபடும் எந்த தகவல்களுக்கும் இனி பாதுகாப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Post a Comment