Header Ads



பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 84 பேர் மரணம், 200 பேர் காயம்



பாகிஸ்தான் குயெட்டா நகரில் நேற்று நடந்த ‌பயங்கர குண்டு வெ‌டிப்பில் 84 பேர் பலியானார்கள் மேலும் 200 பேர் காயமடைநதனர்.

இச்சம்பவம் பாக்கிஸ்தான் குயெட்டாவின் ஹசாரா டவுன், கிரானி சாலையில் நடந்தது.இப்பகுதியில் உள்ள ஷியா இனத்தவர்கள் மீது குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.இச்சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 84 பேர் வரை பலியாகியுள்ளனர். மேலும் 200பேர் காயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதலை மார்கெட் பகுதியில் உள்ள கட்‌டிட தூண் அருகே நிறுத்திய வாகனத்தில் வெடிகுண்டு வைத்து ரிமோட் மூலம் இயக்கி இச்சம்பவத்தை அரங்கேற்றியிருப்பதாக டி.ஐ.ஜி., வாஷிர் கான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

காயமடைந்தவர்களை மருத்துவவையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.இதில் இரு கட்டிடங்களும் நாசமடைந்தன.அப்பகுதியில் உள்ள பல கடைகள் மற்றும் வாகனங்கள் தகர்க்கப்பட்டன. மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் அப்பகுதியில் இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


No comments

Powered by Blogger.