மஸூர் மௌலானா அகவை நிறைவு விழா
(அஷ்ரப் ஏ சமத்)
கொழும்பு வாழ் மருதமுனை மக்கள் சார்பாக காவியக்கோ ஜின்னாஹ் சரிபுத்தீன் ஏற்பாடு செய்துள்ள மஸூர் மௌலானா அகவை நிறைவு விழா
மருதமுனை மாமனிதர் முன்னாள் தமிழரசுக் கட்சி மேலவை உறுப்பினர் முன்னாள் கல்முனை மாநகர சபை நகரபிதா அல் ஹாஜ் மஸூர் மௌலானா அவர்களின் அகவை 80 நிறைவு விழா
கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் 21.02.2013 பி.ப.04.30 மணிக்கு நடைபெறும். இந் நிகழ்வினை கொழும்பு வாழ் மருதமுனை மக்கள் சார்பாக காவியக்கோ ஜின்னாஹ் சரிபுத்தீன் ஏற்பாடு செய்துள்ளார்.
தலைமை சி.வி.விக்னேஸ்வரன் ஓய்வு பெற்ற நீதிமன்ற நீதியரசர், பிரதம அதிதி இரா சம்பந்தன் பா.உ தலைவர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சிறப்பு அதிதி அமைச்சர் பசீர் சேகுதாவுத், விசேட அதிதி புரவலர் அல்ஹாஜ் ஹாசீம் உமர்.
வரவேற்புரை ஜின்னாஹ் சரிபுத்தீன், உரை கலைஞர் கலைச்செல்வன், கௌரவிப்பு கவிஞர் இளநெஞ்சன் முர்சித்தீன் அஸ்ரப் சிகாப்தீன் கவிஞர் நியாஸ் ஏ சமத் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றுவார்கள்.

Post a Comment