மடவளையில் இருந்து உலமா சபைக்கு ஒரு கண்ணீர் மடல்..!
(A.M.M.Rifan - மடவளை பள்ளிவீதி)
அஸ்ஸலாமு அலைக்கும்.
கடந்த 11 பெப். 2013 (திங்கள்) அன்று கண்டி, மடவளையில் ஒரு ஜனாஸா. வபாத்தானவரின் குடும்பத்தினர் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை சேர்ந்தவர்கள்.
இவர்கள் அந்த ஜனாஸாவை அல்குர்ஆன் - சுன்னா முறையிலே அடக்கம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து அதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.
இதன்போது பள்ளி நிர்வாகத்தை சேர்ந்த ஒரு சிலர் அந்த ஜனாஸாவை ஊர் வழக்கப்படிதான் அடக்கம் செய்ய வேண்டும் என்று என்று கூறி தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பை சேர்ந்தவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு, பின்னர் இது கைகலப்பு வரை சென்றது.
இதன் காரணமாக அங்கு வரவழைக்கப்பட்ட வத்துகாமம் போலிசார், இந்த சச்சரவுக்கு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினரே காரணம் என்று கூறி அவர்களில் சிலரை கைது செய்து கரலியத்தை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர். பிரச்சினை அதன் பிறகுதான் விஸ்வருபம் எடுக்க ஆரம்பித்ததுள்ளது.
இதனை தொடர்ந்து வந்த ஜும்மாவின் பின் உரையாற்றிய நிர்வாக சபை தலைவர் அல்ஹாஜ் புர்ஹான் (பஹ்ஜி) (மத்திய மாகாண உலமா சபை தலைவர், மற்றும் அகில இலங்கை உலமா சபை உப தலைவர்) மார்கத்தில் இல்லாத, இஸ்லாத்தில் அனுமதிக்கப் படாத ஒரு கருத்தை வெளியிட்டு ஜமாத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
"ஊர் வழக்கம், ஊர் சட்டம், பள்ளி நிர்வாகம் சொல்வதே முக்கியம்.. மார்க்கத்தில் உள்ளது முக்கியமில்லை"
இவரின் உரையில் இருந்து அனைவரும் விளங்கக் கூடியது, எதிர்வரும் மார்ச் 1ம் திகதி ஜும்மாவின் பின்னர் ஊர் பொது சபையை கூட்டி குர்ஆன் - ஹதீஸ் இல் சொல்லப்பட்டுள்ள இஸ்லாமிய முறையை விட்டுவிட்டு ஊர் வழக்கத்தை மட்டுமே மடவளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று பள்ளி யாப்பில் சேர்க்கவுள்ளார். (இதனை பிரேரித்து ஆமோதிக்க அவரின் சகாக்கள் உண்டு)
இவரின் இந்த சட்டத்துக்கு கட்டுப்படாதவர்கள் பள்ளியில் இருந்து ஒதுங்கி இருக்கலாம் எனவும் அவர் கூறியதும் Audio உரையில் பதிவாகியுள்ளது.
சுமார் 35 சதவீத தவ்ஹீத் ஜமாஅத்தினர் வாழும் மடவளையில் நிச்சயம் அவர்கள் ஊர் வழக்கத்துக்கு கட்டுப்படமாட்டார்கள். இதனால் இன்னுமொரு முறை ஜனாஸா, அல்லது வேறு விடயம் ஒன்று நடக்கும் போது நிச்சயம் ஊரில் குழப்பம் வர வாய்ப்புள்ளது.
இதனை கருத்தில் கொண்டு உலமா சபை உடனடியாக இந்த விடயத்தில் தலையிட்டு நடக்க இருக்கும் விபரீதத்தை தடுக்க முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
உம்மத்தினருக்கு இடையில் ஏற்படப்போகும் இந்த பிளவை, விபரீதத்தை தடுக்க அல்லாஹ்வுக்காக, இந்த விடயத்தில் கவனம் செலுத்துவீர்களா?
ஜஸாக் அல்லாஹ்
முக்கிய குறிப்பு - மடவளையில் இருந்து தனது முழுவிபரத்துடனே குறித்த ஆக்கம் எமது இணையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுதொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் மாற்றுக்கருத்துக்களை அனுப்பிவைப்பார்களாயின் அதனை பிரசுரிக்க எமது இணையம் தயாராகவுள்ளது)

அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் யாதொரு காரியத்தில் முடிவெடுத்துவிட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் சுயமாக வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு, விசுவாசியான எந்த ஆணுக்கும், எந்தப் பெண்ணுக்கும் உரிமையில்லை. (அதில்) அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் எவர் மாறு செய்கிறாரோ அவர், பகிரங்கமான வழிகோடாக திட்டமாக வழிகொட்டுவிட்டார்.
ReplyDelete(அல்அஹ்ஸாப் 33:36)