காத்தான்குடியின் சிறந்த முன்மாதிரி..!
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேமளன கலை கலாசாரக் குழுவினால் 'இஸ்லாமிய வரையறை பேணி கலை கலாசார நிகழ்வுகளை எவ்வாறு நடாத்தலாம்' 'இஸ்லாமிய நுண்கலையும் அவற்றைப் பாதுகாப்பதன் அவசியமும்'எனும் தலைப்புக்களில் விஷேட கருத்தரங்கொன்று எதிர்வரும் 03.03.2013 ஞாயிற்றுக்கிழமை சம்மேளன அஷ்ஷஹீத் அஹமட் லெப்பை ஞாபகாரத்த மாநாட்டு மண்டபத்தில் காலை 09.00மணி முதல் பி.ப. 1 மணி வரை நடைபெறவுள்ளதாக பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன செயலாளர் அப்துல் காதர் (பலாஹி) தெரிவித்தார்.
பிரதேசத்தில் இடம்பெறுகின்ற முன்பள்ளி பாடசாலைகளின் கலை விழாக்கள் மற்றும் ஏனைய விழாக்கள் என்பவற்றில் இஸ்லாத்திற்கு முரணான அம்சங்கள் இடம்பெறாமலிருப்பதற்கும் அவற்றுக்கு மாற்றீடாக இஸ்லாமிய ஷரீஆ அனுமதிக்கும் வகையில் நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு வழிகாட்டும் முகமாகவும் இஸ்லாமிய நுண்கலை பற்றிய அறிவினை எமது இளம் சந்ததியினருக்கு வழங்கி அவற்றை வளர்ப்பதற்காகவுமே இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்விஷேட கருத்தரங்கில் பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ் இபிஸ்மி அல் குர்ஆன்பாடசாலை பணிப்பாளர் அஷ்ஷெயக் எம்.பீ.எம்.பிர்தௌஸ்(நளீமி) ஆகியோரினால் விரிவுரைகள் நடாத்தப்படவுள்ளன.
இக்கருத்தரங்கில் காத்தான்குடியிலுள்ள ஒவ்வொரு பாலர் பாடசாலை சார்பிலும் இரண்டு ஆசிரிய ஆசிரியைகளும் இரு நிர்வாகியும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்பணி ஏனைய பகுதிகளுக்கும் விரிவடைய வேண்டியது அவசியமானதொன்று என நினைக்கிறேன்!!
ReplyDelete