புத்தளம் புழுதிவயலில் வாகன விபத்து - 70 வயது மூதாட்டி வபாத்
புத்தளம் புழுதிவயல் பிரதேசத்தில் இன்று 28-02-2013 மாலை முச்சக்கர வண்டியொன்றில் மோதி 70 வயது வயோதிபப் பெண் ஒருவர் உயிரழந்துள்ளதாக புத்தளம் பொலிசார் தெரிவித்தனர். புழுதிவயல் கிராமத்தைச் சேர்ந்த கச்சி மரைக்கார் நபீசா உம்மா எனும் வயோதி பெண்னே இவ்வபத்தில் உயிரிழந்தவராவார். வீதியில் வந்து கொண்டிருந்த குறித்த வயோதிபப் பெண் மீது அவ்வீதியில் வந்த முச்சக்கர வண்டி மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று மாலை 5.30 மணியளவில் புழுதியல் கரம்பை வீதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயங்களுக்குள்ளான இப்பெண் உடனயடியாக புத்தளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கு உயிரிழந்துள்ளார். இவ்விபத்துடன் தொடர்புடைய முச்சக்கரவண்டியின் சாரதியான அதே பிரதேசத்தைச் சேர்ந்த நபர் உயிரிழந்த பெண்ணின் உறவுக்காரர் என தெரிவிக்கப்படுகின்றது. விபத்துடன் தொடர்புடைய முச்சக்கர வண்டியின் சாரதி புத்தளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.புத்தளம் பொலிசார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment