அவுஸ்திரேலிய பெண்கள் அணி 6 வது முறையாக உலக கோப்பை வென்றது
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், பெண்களுக்கான 10வது உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் மும்பை மற்றும் கட்டாக் நகரில் நடந்தது. லீக் மற்றும் "சூப்பர்-6' சுற்றில் அசத்திய ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பைனலுக்கு முன்னேறின. நேற்று, மும்பையில் நடந்த பைனலில், "டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஜோடி பீல்ட்ஸ், "பேட்டிங்' தேர்வு செய்தார்.
கேமிரான் அபாரம்: முதலில் "பேட்' செய்த ஆஸ்திரேலிய அணிக்கு மேக் லானிங், ஹெய்ன்ஸ் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்த போது லானிங் (31) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய ஹெய்ன்ஸ் (52) அரைசதம் அடித்தார். அடுத்து வந்த பிளாக்வெல் (3), லிசா ஸ்தலிகார் (12) ஏமாற்றினர். அபாரமாக ஆடிய ஜெஸ் கேமிரான், அரைசதம் அடித்தார். இவர், 75 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
கேப்டன் ஜோடி பீல்ட்ஸ் (36*) ஓரளவு கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 259 ரன்கள் எடுத்தது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் குயின்டைன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
சவாலான இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கிசியா நைட் (17), நடாஷா மெக்லீன் (13) ஏமாற்றினர். அடுத்து வந்த ஸ்டபானி டெய்லர் (5) நிலைக்கவில்லை. கி÷ஷானா நைட் (21), கேப்டன் மெரிசா (23), டாட்டின் (22), கேம்ப்பெல்லி (11) பெரிய அளவில் சோபிக்கவில்லை. மற்ற வீராங்கனைகள் ஏமாற்ற, வெஸ்ட் இண்டீஸ் அணி 43.1 ஓவரில் 145 ரன்களுக்கு சுருண்டு, தோல்வி அடைந்தது.
ஆஸ்திரேலியா சார்பில் எலிசி பெர்ரி 3 விக்கெட் கைப்பற்றினார்.
ஆட்ட நாயகி விருதை ஆஸ்திரேலியாவின் ஜெஸ் காமிரான் வென்றார். தொடர் நாயகி விருதை, நியூசிலாந்தின் சுஜி பேட்ஸ் தட்டிச் சென்றார்.

Post a Comment