கறையான் புற்றும் கச்சிதமும் களையப்படவேண்டும்
(Bahurudeen Jasa
International Islamic University Chittagong)
இலங்கை நாட்டில் கிட்டதட்ட 20 லட்சத்துக்கு மேலதிகமான முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில் கிழக்குமாகாணம், கொழும்பு, கண்டி மற்றும் புத்தளம் ஆகிய பிரதேசங்களில் மிகச்செறிவாகவும் நாட்டின் ஏனைய பிரதேங்களில் ஐதாகவும் வாழ்ந்து வருகிறோம். இவ்வாறு வாழும் எங்களின் பலமாக வணிகம் திகழ்கிறது. என்பது தெள்ளத்தெளிவான உண்மை.
கடந்த முன்று தசாப்தங்களாக நாட்டில் நடைபெற்ற யுத்தத்தினால் எங்களுடைய சமூகம் பாதிக்கப்பட்டது, ஆனால் குழிதோண்டபடவில்லை. இப்பொழுது பேரினவாத சக்திகளால் எமக்கான சதிவலை தீட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதனில் சிக்கி சின்னாபின்னமாகி செய்வதறியாமல் திகைத்துக்கொண்டிருக்கிறோம். எங்களது குழிப்பெட்டிக்கு பின்னால் யூத, கிறிஸ்தவ மற்றும் ஷீஆ சக்திகள் இருக்கின்றது என்பது ஆய்வியல் தகவல்.
எங்களுடைய மக்களிடம் காணப்படும் பலவீனம் என்னவென்பதை சற்று அலசுவோம்.
* ஈமானியத்தில் குறைபாடு :- இதற்கு எடுத்துக்காட்டாக எங்களுடய பள்ளிவாசல்களை நோக்கலாம். ஜூம்மா தொழுகைக்கு வரும் முஸ்லிம்களின் பத்துவீதமும் அதேநாள் சுபஹூக்கோ, அஸருக்கோ வருவதில்லை.இதனுடாக ஈமானியத்தின் நிரம்பல் இல்லாத்தன்மையை நிர்ணயிக்கலாம்.
* ஒற்றுமையின்மை :- இன்று எமது சமுகத்தின் கல்வியளாளர்கள், அரசியல்வாதிகள், மார்கஅறிஞர்கள், மற்றும் அனைத்துதரப்பினர்களிடையேயும் கருத்துவேறுபாடு எனும் கறையான் புற்றுக்கட்டியுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இஸ்லாமியக்குழுவுடமை ஒற்றுமை எனும் கயிற்றை திரிக்கிறது. எடுத்துக்காட்டாக கப்ருஸ்தானத்தை அந்நியவன் உடைத்தால் என்ன அது மார்கத்துக்கு முரண் ஆனது தானே. நல்லது தானே செய்திருக்கிறான். என்று நாங்கள் பின்வாங்கியதன் விளைவே இன்று நடக்கும் வேட்டையாட்டத்திற்கான வெள்ளோட்டம்
* உறங்கும் இளைஞர்கள்:- எங்களுடய முஸ்லிம் இளைஞர்கள் சமுகத்தைப்பற்றி எந்தவொரு சிந்தனையும் இல்லாமல் களியாட்டம், காதல், காமம், போதை என்று ஜாஹிலியத்திற்கு அடிமையாகி கொண்டிருக்கிறார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக முஸ்லிம் இளைஞர்கள் அதிகம் கல்வி பயிலும் பல்கலைகழகங்களில் கூட தற்போது பேசப்படும் வெறியாட்டத்திற்கு எதிராக ஆய்வுக்கருத்தரங்குகளையோ, விழிப்புணர்வுகளையோ தேசியத்திற்கோ, சர்வதேசத்திற்கோ கொண்டு செல்லாமல் இருப்பதை கூறலாம். எமது வாலிபர்கள் face book இனையத்தளத்தை chatting பண்ணுவதற்கும், சினிமா மற்றும் விளையாட்டுத்தகவல்களை பரிமாறும் ஊடகமாகவே பயன்படுத்துவது வருந்தத்தக்கது.
* உறுதியான தலைமையின்மை :- ஆசிய கலாசாரத்தை பொறுத்தவரை தலைமையென்பது இரு பிரிவாக நோக்கப்படுகிறது. ஒன்று அரசியல் மற்றது மார்கம். இவையிரண்டுமே முஸ்லிம்களிடம் வலுவிழந்து போயுள்ளது என்பது மறுப்பற்ற உண்மை. சுருக்கமாக கூறப்போனால் சமூகத்தின் தேவைப்பாடு மீண்டும் ஒரு அஷ்ரப்f
இந்த நான்கையும் நன்கு ஆராய்ந்து பேரினவாதசக்திகள் கச்சிதமாக காய்நகர்த்தலை மேற்கொண்டு வருகின்றனர். இது இப்பொழுது ஹலால் ஹராம் என்று செயல்படுத்தப்பட்டு இனி ஹிஜாப், ஷரியாச்சட்டம், காதிநீதிமன்றம், இஸ்லாமியவங்கி முறைமை என வெளிக்காட்டப்படவுள்ளது.
இதற்கு இனிமேல் இடம் கொடுக்கக் கூடாமல் இருப்பதற்கு எங்களின் ஓட்டைகளை உடனடியாக அடைக்கவேண்டிய சூழ்நிலைக்கு உட்பட்டிருக்கிறோம். இந்த நான்கையும் இதுசார்ந்த சிறிய பிரச்சினைகளையும் உடனடியாக களைய புத்திஜீவிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்

செயலாற்றுதல் என்பதற்கும் திட்டமிட்டு செயலாற்றுதல் என்பதற்கும் நிறையவே வேறுபாடுகள் உள்ளதை போல் அதன் முடிவுகளிலும் மிகவும் விசாலமான வித்தியாசங்கள் இருக்கும். இது எமது இன்றைய சமூகத்தின் நிலைக்கும் சரியாய் பொருந்தும். தம்புள்ளை பள்ளிவாசலில் தொடங்கி இன்றைய மாத்தறை தாக்குதலில் நின்று கொண்டிருக்கும் பேரினவாத பாசிசத்தின் அசிங்கமான அத்தியாயங்கள் எமக்கு கற்றுத்தந்ததும், சிந்திக்கவைத்ததும், செயலாற்ற தூண்டியதும் ஏராளம். முஸ்லிம்களுக்கான தனியான ஊடகத்தின் தேவை, சமூக ரீதியிலான ஒற்றுமை, புதிய அரசியல் கலாச்சாரம், அரசியல் மற்றும் மார்க்க ரீதியிலான பிரிவினைகள் என தொடங்கி தனிமனித ஒழுக்கம் வரை நமது வாழ்க்கை கோலங்களில் நிறையவே மாற்றதுக்கான தேவை இருகின்றது என்பதை உணர்திக்கொண்டிருகின்ற தருணம் இது.
ReplyDeleteஅண்மைக்கால சட்டமூலங்கள், நாடாளுமன்ற உரைகள், பேரின அமைச்சர்களின் இனவாத நச்சுக்கருத்துக்கள் என நடக்கும் அணைத்து நிகழ்வுகளும் எமக்கு உணர்த்துவது இது அரம்பம் அல்ல ஒரு மிகப்பெரிய சதித்திட்டத்தின் ஆரம்ப படிகள் என்பதே. முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சி, பொருளாதார பலம், தனித்துவமான வாழ்க்கை முறை ஏன அனைத்திலும் உள்ள காழ்ப்புனர்சியின் கீழ்த்தரமான வெளிப்பாடே இது. தனிமனிதன் என்ற ரீதியிலும், நாம் சார்ந்திருக்கின்ற சமூகம் என்ற ரீதியிலும் நம் ஓவ்வொருவருக்கும் இந்த இனவாத நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக நிறையவே கடப்பாடுகள் இருகின்றன.
ஆனால் நிச்சயமாக இந்த கடப்பாடுகள் Facebook போஸ்டுகளுடனும், சந்தியோர பாராளுமன்றங்களோடும், Dining Table சட் களோடும் முடிந்துவிடாது. மாற்றமாக நாம் எதிர்நோக்கும் இன்னல்களையும், எமது பிரச்சினைகளையும் சமூகமயப்படுத்த வேண்டிய மிகக்கட்டாய தேவையில் நாம் இருக்கின்றோம். அது உள்நாட்டிலும் சரி சர்வதேசத்திலும் சரி. இந்த சமூகமயப்படுத்தலின் அவசியம் எந்த அளவுக்கு உணரப்படுகிறது எனில், ஒரு ஆசிரியர் ஹலால் என்ற ஒரு நடைமுறை இலங்கையில் இருக்கின்றது என்தை அண்மைய BBS வின் ஆர்ப்பாட்டத்தின் பின்தான் அறியவேண்டிய மிக பாரதூரமான நிலையில் உள்ளதை கொண்டு. (இந்த வகையில் பார்க்கும் பொது நாம் BBS க்கு நன்றி சொல்ல வேண்டும்).
உணர்வற்ற எமது அரசியல் வியாபார ஜடங்க்களை மட்டுமே இனிமேலும் நம்பி இருப்பதை தவிர்த்து, அல்லாஹ்வின் உதவியால் எமக்கென கிடைக்கப்பெற்ற சிறந்த உலமக்ளின் வழிகாட்டலை கொண்டு எமது புத்திஜீவிகளையும், இதர தரப்புகளையும் கொள்கை, கட்சி, ஊர், நிறம், என்ற எல்லைகளுக்கு அப்பால் இணைத்து, இணைந்து எமது எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் எமக்கு முன்னால் உள்ளது.
(ஈஸாவை நிராகரித்தோர்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான். (அல்-குர்ஆன் 3:54)
நாம் நன்மையை நாடி செய்யும் ஒவ்வொரு செயலையும் வல்ல அல்லாஹ் வெற்றியின் பக்கம் திருப்புவானாக..!!