கற்பிட்டியின் 31 வருட கனவு நனவாகிறது (படங்கள்)
(M.B. மொஹமட் அர்ஷத்)
புத்தளம் வலயம் கற்பிட்டி கோட்ட கல்விக்காரியாலயத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று (28.02.2013) காலை சிறப்பாக நடைபெற்றது. சுமார் 31 வருடங்களாக அல் அக்ஸா தேசிய பாடசாலையின் ஆய்வுகூட கட்டடத்தில் இயங்கி வந்த மேற்படி காரியாலயம் கற்பிட்டி கல்விச்சமுகத்தினதும் புத்திஜீவிகளினதும் முயற்சியின் காரணமாக 36 லட்சம் ரூபா செலவில் தனியான, பொதுவான இடத்தில் அமைக்கப்பட ஏற்பாடகியுள்ளது. கற்பிட்டி சுகாதர வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு பின்னாலுள்ள இடத்தில் அதற்கான வைபவம் நடைபெற்றது.
பௌத்த, கத்தோலிக்க, இஸ்லாமிய,இந்து மத வழிபாடுகளுடன் ஆரம்பமான் இவ்வைபவத்தில் வடமேல் மாகாண பெருந்தெருக்கள், வீடமைப்பு,மீன்பிடித்துறை அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா மற்றும் மாகாண சபை உறுப்பினர் N.T.M. தாஹிர் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டதோடு கற்பிட்டி பிரதேச சபையின் அனைத்து கட்சிகளினதும் பிரதினிதிகள், அனைத்து பாடசாலைகளின் அதிபர்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் பெருந்திரளான ஊர் பொது மக்களும் இன மத கட்சி பேதங்களின்றி கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment