Header Ads



அக்கரைப்பற்று அல் கமர் வித்தியாலயத்தின் கற்றல் விருத்தி செயற்பாடுகள்



அக்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள அக்கரைப்பற்று கோட்டத்தில் காணப்படும் ஒருபாடசாலை அல் கமர் வித்தியாலயமாகும். தரம் 1இலிருந்து 9வரையான வகுப்புக்களைக் கொண்ட இப்பாடசாலை அமைந்திருப்பது அக்கரைப்பற்றிலிருந்து சுமார் 6கிலோமீற்றருக்கும் அப்பாலுள்ள இசங்கனிச்சேனை எனும் இடத்திலாகும். முழுமையான நெல்வயல் பிரதேசத்தில் காணப்படும் இப்பகுதிவாழ் மக்களின் பிரதானமான தொழில் விவசாயமாகும். சுற்றிவர நெற்காணிகள் இடையிடையே சிறுசிறு வீடுகளும் அங்குள்ள பிள்ளைகளும் கற்க வேண்டும் என்ற ஆவலில் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையின் அதிபராக எம்.ஏ. ஏ. றசாக் அவருடன் இணைந்த ஆசிரியர் குழாமும் இணைந்து மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை அதிகரிக்கும் நோக்குடன் ஈடுபட்டு வருகின்றமை சிற்புக்குரியதாகும். முழுமையாக பின்தங்கிய பிரதேசத்தில் இப்பாடசாலை அமைந்திருந்தமையினால் கொயிக்கா எனும் சர்வதேச தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் பாடசாலையின் பௌதீக வளப்பற்றாக்குறை மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், மாணவர்களது கற்றல் விருத்திச் செயற்பாடுகள் போன்றன சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை விசேட தன்மையாகும்.

இந்நிலைமையில் அங்கு கற்றலில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பயிற்சிகள் மூலமும், அவர்களது தியாக சிந்தனை, அர்ப்பணிப்பு போன்றவைகளை முன்னிலைப்படுத்தி மாணவர்களது கற்றலுக்குதவும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். சகல வசதிகளும் உள்ள பாடசாலைகளுக்குச் சமனான வகையில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் தயாரிக்கப்பட்டு வகுப்பறையில் கற்றலில் ஈடுபடுகின்ற ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள். மாணவர்கள் சிறப்பான அடைவு மட்டத்தினை பெற்றுக் கொள்வதற்கு இதுபோன்ற நடவடிக்கைகள் மிகுந்த அநுகூலங்களை அச்சமுகம் பெற்றுக் கொள்ளும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

(அல் - கமர் வித்தியாலயத்தன் முகத்தோற்றமும், வகுப்பறைச் செயற்பாடுகளும், அங்குள்ள கற்றல் உபகரணங்களையும் படங்களில் காணலாம்.)



1 comment:

  1. i miss my school (my index no 191) there is some tree made by my hand i am very happy to see my school

    ReplyDelete

Powered by Blogger.