மத்தியஸ்தம் தொடர்பாக கிராம அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகளை அறிவூட்டும் செயலமர்வு
(எம்.எம்.ஜபீர்)
நீதி அமைச்சின் ஏற்பாட்டில் மத்தியஸ்தம் தொடர்பாக அம்பாரை மாவட்ட கிராம அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோரை அறிவூட்டும் செயலமர்வு இன்று (2013.01.08) சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது முரண்பாடுகள், மத்தியஸ்தம், பிணக்குகளை தீர்த்து வைத்தல் என்பன தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
கல்முனை தமிழ் பிரிவு, சாய்ந்தமருது ஆகிய பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் கல்முனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் கலந்து கொண்ட இச்செயலமர்வில் நீதியமைச்சின் நிகழ்ச்சித் திட்டமிடல் உத்தியோகத்தர்களான வீ.சவரிநாயகம், பி.சனாதனசர்மா, லலித் ஹபுகஹபிடிய ஆகியோர்கள் மத்தியஸ்தம் தொடர்பாக விளக்கமளித்தனர்.


Post a Comment