Header Ads



முஸ்லிம் தங்கநகை வியாபாரியிடம் கொள்ளை - வெள்ளைவானில் வந்தோர் அட்டகாசம்

(அபூஆஷியா)

காத்தான்குடியைச் சேர்ந்த தங்க நகை மொத்த வியாபாரம் செய்கின்ற வர்த்தகர் அப்துர் ராசிக்.இவர் சுமார் ஆறுமாத காலமாக கிண்ணியாவில் வியாபார நிலையம் ஒன்றை நடாத்தி வருபவர்.தொழில் தேவையின் நிமித்தம் அடிக்கடி கொழும்புக்குச் சென்று வருவது வழக்கம்.
வழக்கம் போல இன்று 09-01-2013 அதிகாலையில் கொழும்பிலிருந்து கிண்ணியா நோக்கிச் செல்லும் பஸ் ஒன்றில் பயணம் செய்து கந்தளாயிலுள்ள ஒரு வியாபார நிலையத்திற்கு நகைகளை கொடுப்பதற்காக கந்தளாய் பிரதான வீதியில் பஸ்ஸை விட்டு இறங்கி நடந்து சென்றார்.
அவ்வேளையில் பின்னால் ஒரு வெள்ளை நிற வேன் ஒன்று வந்து நின்றது.
அவ்வேனில் இருந்து இறங்கிய சிலர் தன்னிடமுள்ள நகை மற்றும் பணத்தை அபகரிக்க முயன்றனர்.அதனை தான் எதிர்க்க முற்பட்ட போது அதில் ஒருவர் தன்னை கத்தியால் குத்திவிட்டு தன்னிடமிருந்த பத்து லட்சம் ரூபா பணத்தையும் இருபது பவுண் தங்க நகையையும் அபகரித்துச் சென்று விட்டனர்.
இதுவே தற்போது காயங்களுக்குள்ளாகி கந்தளாய் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அப்துர் ராசிக் என்பவரின் நெருங்கிய நண்பர் ஒருவர் எமது செய்திப்பிரிவினரை தொடர்புகொண்டு வழங்கிய தகவல்களாகும்.

பொதுமக்களின் கவனத்திற்கு...!!

 நாட்டில் விடுதலைப்புலிகளுடனான யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வந்ததன் பின்னரும் கொலை,கொள்ளை,பெண்கள் மீதான வன்முறைகள்,இன மோதல்கள் என பல்வேறு குற்றச் செயல்கள் ஆங்காங்கே பரவலாக நடந்த வண்ணமே உள்ளது.
இரவு நேரங்களில் பயணம் மேற்கொள்கின்ற இவ்வாறான வர்த்தகர்கள்,பெண்கள்,சிறுவர்கள் போன்ற பொதுமக்கள் முதலில் தங்களின் பாதுகாப்பு விடயத்தில் கவனம் செலுத்துதல் அவசியம். நள்ளிரவு வேளைகளில் பணம் நகை,போன்றவைகளுடன் பயணம் செய்வது,பெண்களை தங்களோடு அழைத்துச் செல்வது போன்றவைகள் முற்றாகத் தவிர்க்கப்படல் வேண்டும்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வளவுதான் மும்முரமாக இருப்பினும் இரவு வேளைகளில் தனிமையான பிரதேசங்களில் இப்படியான வன்முறைகள் அனைத்து இடங்களிலும் இடம்பெறுவது  நமது நாட்டில் தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறிப்போய்விட்டது.
எனவே,பொதுமக்கள் இது விடயத்தில் மிகவும் அவதானத்துடன் செயல்ப்பட வேண்டுமென்பதே எமது ஆலோசனையாகும்.

No comments

Powered by Blogger.