Header Ads



சவுதி அரேபியாயில் இப்படியும் ஒரு சிக்கல்..!


சவுதி அரேபியாவை சேர்ந்த, 90 வயது நபர், 15 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். சவுதி அரேபியாவை சேர்ந்த செல்வந்தர்கள், ஏழை நாடுகளை சேர்ந்த சிறுமிகளை திருமணம் செய்து கொள்வது நடக்கிறது.

இந்த வகையில், அரேபியாவை சேர்ந்த, 90 வயது நபர், 15 வயது பெண்ணை, சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். மணமகளின் தந்தை, ஏமன் நாட்டை சேர்ந்தவர்; தாய், சவுதி அரேபியாவை சேர்ந்தவர். முதலிரவு அன்று, மணமகன் ஆர்வத்துடன், படுக்கை அறைக்கு செல்ல முயன்றார். ஆனால், பயந்து போன மணமகள், கதவை உள்பக்கம் தாழிட்டு கொண்டார். பலமுறை கதவை தட்டி பார்த்து ஓய்ந்து போன கிழவர், தனியாக படுத்து உறங்கினார். மறுநாளும் இந்த மணமகள், படுக்கை அறை கதவை உள்பக்கமாக தாழிட்டு கொண்டு, மணமகனை, உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டார்.

அதுமட்டுமல்லாது, அங்கிருந்து தப்பி, பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டாள். இதனால், வயதான மணமகன் கொதித்து போயுள்ளார். ""மணமகளுக்கு வரதட்சணையாக, 10 லட்ச ரூபாய், கொடுத்துள்ளேன். எனவே, இந்த திருமணம் சட்டபூர்வமானது. பணத்துக்காக என்னை, மணமகளின் பெற்றோர் மோசம் செய்து விட்டனர். சிறுமியை என்னுடன் அனுப்பாவிட்டால், வரதட்சணை தொகையை திருப்பி தர வேண்டும்,'' என, தெரிவித்துள்ளார். கொள்ளு பேத்தி வயதுடைய பெண்ணை, திருமணம் செய்த, இந்த கிழவரை, இணைய தளத்தில் பலர், திட்டி தீர்த்துள்ளனர். மனித உரிமை அமைப்புகள், இந்த திருமணத்தை கண்டித்துள்ளன.



No comments

Powered by Blogger.