யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி போகமாட்டார்
எதிர்வரும் 15ஆம் 16ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜயம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டச் செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
எதிர்வரும் 15ஆம் 16ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருந்த முக்கிய நிகழ்வுகளில் ஜனாதிபதி முக்கிய அதிதியாக கலந்து கொள்ளவிருந்தார்.
அதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையின் புதிய கட்டிடத் திறப்பு விழா, தேசிய பொங்கல் விழாவில் பங்கு பற்றுவதற்கும் எதிர்வரும் 15ம், 16ம் திகதிகளில் யாழ்.வருகை தரவிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜயம் ரத்துத் செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போதுள்ள காலநிலை சீரின்மையினாலேயே குறித்த பயணம் ரத்துச் செய்யப்பட்டதாக யாழ்.மாவட்ட செயலகம் உறுதி செய்துள்ளதுடன், அவர் அதிதியாக கலந்து கொள்ளவிருந்த நிகழ்வுகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெறும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் யாழ்.போதனா வைத்தியசாலையின் புதிய கட்டிடத்தின் திறப்பு விழா மற்றுமொரு தினத்தில் இடம்பெறும் எனவும் யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Post a Comment