Header Ads



திருகோணமலையில் தனியார் பஸ் போராட்டம் தொடருகிறது..!



(ஏ.எல்.றபாய்தீன்பாபு)

திருகோணமலையில் தனியார் போக்குவரத்து பஸ் ஊழியர்களின் பணிபகிஸ்கரிப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. இதனால் பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிநோக்கி வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை 12.00 மணியுடன் ஆரம்பமான பணிபகிஸ்கரிப்பு பகிஸ்கரிப்பு தமக்கான நியாயம் கிடைக்கும்வரை தொடருமென மட்டுப்படுத்தப்பட்ட திருகோணமலை தனியார் பஸ் கம்பனிகளின் தலைவர்

ஜி;.ஜி.விமலசேன தெரிவித்தார். 165 தனியார் பஸ்களும் 22 இ.போ.ச.பஸ்களும் திருமலையில் சேவையிலுள்ள நிலையில்

இவ்விரு தரப்பினரிடையே கால அட்டவணையைப் பேணி Nபுர்.வ.சேவையில் ஈடுபடுவதில் பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டு

போலிஸ் நீதிமன்றம் வரை ஏலவே 8 சம்பவங்கள்  நடந்துள்ளன. இந்நிலையில் இ.போ.வ.திருகோணமலை பஸ் டிப்போ கால அட்டவணையைப் பேணாது தன்னிச்சையாக செயல்படுவதோடு வீதி அநுமதிப் பத்திரமின்றி தூர இடங்களான யாழ்ப்பாணம் மற்றும் தங்கல்ல போன்ற இடங்களுக்கு பயணிப்பதாகவும் தனியார் போக்குவரத்து பஸ் உரிமையாள்ர்;கள் குற்றம் சுமத்துகின்றனர்.இதே நேரம் தாம் மக்களின் நலன் கருதி தூர இடங்களுக்கான பஸ் கட்டணத்ததை குறைத்து நியாயமாகவும் மக்களுக்காக சேவை செய்வதாக இ.போ.வ.சபை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்;. மொத்தத்தில் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவிப் பொதுமக்களே. போதிய பஸ் சேவையல் இல்லாது அரச ஊழியர்கள் பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.



No comments

Powered by Blogger.