முஸ்லிம்களுக்கு எதிராக தொடர் அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன
அநுராதபுரம், மல்வத்து ஓயா என்னும் இடத்திலுள்ள பள்ளிவாசலையும், அங்கு வாழும் முஸ்லிம் மக்களையும் அங்கிருந்து உடனடியாக அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, பௌத்த பிக்குகளால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமைக்கு முஸ்லிம் தமிழ்த் தேசிய முன்னணி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் முஸ்லிம் தமிழ்த் தேசிய முன்னணியின் அஸாத் ஸாலி தெரிவித்ததாவது,
முஸ்லிம் மக்களுக்கு எதிராக நாட்டில் தொடர்ச்சியாக அடக்குமுறைகள் கட்ட விழ்த்து விடப்படுகின்றன. தம்புள்ளையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அடக்குமுறைகள் அநுராதபுரம் வரை தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
முஸ்லிம்களுக்கு எதிராக இந்த அரசால் இவ்வளவு அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு வருகின்ற நிலையிலும், அரசுடன் ஒட்டிக்கொண் டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து முஸ்லிம் காங்கிரஸ் செயற்பட வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்றார்.

முதலில் நாம் கன்றசுக்கு ஆதரவில்லை என்பதற்கு அப்பால்,
ReplyDeleteஹலோ அசாத் சாலி அய்யா, நீங்க கடைசியாக கொழும்பு பிரதி முதல்வரா இருக்கும் போது, கொழும்பில் Slave Island இல் (if Iam correct)சட்டவிரோத மக்களை இந்த அரசு 24 மணி நேர காலவகாசத்தில் புல்டோசர் போட்டு வீடுகளை உடைத்து அந்த பிரதேசத்து மக்களை அதிரடியாக அகற்றியது. அதில்கூட அதிக முஸ்லிம் குடும்பங்கள்தான் பாதிப்படைந்தது. அந்தநேரம் எதற்கும் வக்கற்ற திராநியற்ற நாதியாக நீங்கள் இருந்ததை நாங்கள் இன்னும் மறக்க வில்லை. அந்த நேரம் கொழும்பு மாநகரமே உங்க UNP கட்டுப்படில்தான் இருந்தது. இதெல்லாம் மறந்து நீங்கள் மற்றவனை குறை கான்குறீர். இது உமது குறை அன்றி வேறில்லை. மற்றவன் மீது ஒரு விரல் நீட்டுகின்ற அதே கையின் நான்கு விரல்கள் உம்மமையே சுட்டிக்காட்டுகின்றன..
at least Asath sally askeing about that but mr saley i thing you r pa saporter
ReplyDelete