ஒஸாமா பின்லேடனை அமெரிக்கா எவ்வாறு கொலைசெய்தது - விளக்குகிறார் விமல் வீரவன்ச
(அஸ்ரப் ஏ சமத்)
பின்லாடனை பிடிப்பது எவ்வாறு ? பின்லாடன் பாக்கிஸ்தானில் உள்ளார் என அமேரிக்காவின் இரகசிய துப்பு தேடுபவர்கள் பாக்கிஸ்தானுக்குள் உட்புகுந்தனர். அதன் பின் முழு பாக்கிஸ்தான் முழுவதிலும் பின்லாடனை பிடிப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தனர். பாக்கிஸ்தானுக்கு கடன் வழங்கும் திட்டமொன்றை ஆரம்பித்து அதனை முழு நாட்டுக்கும் அமுல் படுத்தும் திட்டத்தின் கீழ் செயல்பட்டனர். அதன் பின் பாக்கிஸ்தான் வாழும் மனிதர்களிடையே ஒரு பயங்கர தொற்று நோய் பரவி உள்ளதாக செயல்படத் தொடங்கினர். அதனை கண்டு பிடிப்பதற்கு பாக்கிஸ்தானில் வாழும் சகல மக்களுக்கும் இரத்தப் பரிசோதனை நாடு முழுவதிலும் நடத்தப்படல் வேண்டும் என செயல்பட்டனர்.அதற்காக ஒரு கடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்தினர் அந்த இரத்தப்பரிசோதனைகளை அமேரிக்காவுக்கு கொண்டு சென்றனர். அதற்காக பாக்கிஸ்தான் இரத்தப் பரிசோதக அதிகாரிகைய அமேரிக்காவுக்கு அழைத்தனர். அவருக்கு பெரும் தொகை பணம் வழங்கினார்கள். அதில் பின்லாடனின் இரத்தப் பரிசோதனை உள்ளதா? எனப் பரிசோதித்தனர். அவர் பாக்கிஸ்தானில் இருப்பதை உறுதிப்படுத்தினர். அவரது டி.என்.ஏ இரத்தப் பரிசோதனை முலம் அவரது முகவரியையும் கண்டு பிடித்தனர். அமேரிக்க படையினர் பின்லாடன் வாழும் வீட்டை சுற்றி அவரை படு மோசமாக கொலை செய்தனர். இவ்வாறு சதித் திட்டங்களை செயல்படுத்துபவர்கள் தான் அமேரிக்கர்கள். அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
அமேரிக்கா ஐனாதிபதி பராக் ஒபாமாவின் பிரதிநிதிகள் இலங்கைக்குள் வரவுள்ளனர். அவர்கள் இந்த நாட்டில் நீதி சட்டம் இந்த நாட்டில் இல்லை. எனக் கூறி பொய்த் தகவல்களைச் சேர்ப்பதற்கே இங்கு வந்துள்ளனர். ஏற்கனவே இவர்கள் இந்த நாட்டில் ஐனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர், யுத்த வீரர்களையும், படைத்தளபதிகளையும் மற்றும் அதிகாரிகளும் யுத்த காலத்தில் அநீதி இழைத்தவர்கள் என்ற போர்வையில் சர்வதேச நீதிமன்றத்திற்கு நிறுத்துவதற்கு முயற்சித்து வந்தார்கள்.
அந் நிகழ்ச்சி நிரலுக்கு ஒரு சான்றாக பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாய்ககாவை நீக்கியமை சாட்டாகக் கொண்டு இவர்கள் மேலும் பொய்த் தகவல்களைச் சேகரிப்பதற்கே இங்கு வந்துள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
மேற்கண்டவாறு வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று மாவத்துகம ஜனசெவன வீடமைப்புத் திட்டமொன்றை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்தாவது,
பராக் ஒபாமாவின் 3 பிரதிநிதிகள் இலங்கை வருகின்றனர். இலங்கையில் நீதி சட்டம் குலைந்து போகியுள்ளது. என்று அமேரிக்கா ஜனாதிபதிக்கு அங்கு நித்திரைகொள்ள முடியவில்லையாம். இலங்கை வரும் பிரதிநிதிகளிடம்; சாட்சி சொல்வதற்கு பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவை இங்கு உள்ள சில எதிர்கட்சி அரசியல்வாதிகளும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் சில முகவர்களும் முயற்சிக்கின்றனர். சிரானி பண்டாரநாயக்க குற்றம் இழைத்தவர் அவர் பாராளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதிகள் ஊடாக 3-2 பங்கு பெரும்பாண்மை வாக்கு முலம் அவர் பதவி நீக்கப்பட்டார்.
சரத் பொண்சோகாவை பயண்படுத்தி சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு எதிராக ஜ.நா மனித உரிமை தீர்மாணத்தை நிறைவேற்ற சாட்சிக்காரராகவும் பாவித்தார்கள். அவர் இலங்கைக்கு எதிராகவும் பாதுகாப்புச் செயலாளராக்கு எதிராக இலங்கை ஊடகங்களில் தெரிவித்த கருத்தே சில வெளிநாட்டு சக்திகளுக்கு ;சாட்சியாக அமைந்தது. மேலும் இலங்கைக்கு எதிராக வேண்டுமென்று யுத்தக் குற்ற பலி சுமத்தி ஜ.நாடுகள் மணித உரிமையிலும் நிறைவேற்றினாhகள்.இத்திட்டத்திற்கு சில வெளிநாடுகளில் உள்ள வெள்ளை புலிகளும் அந்த நாட்டில் வாழும் இலங்கைப் புலிகளும் மிகவும் பிரயத்தணம் செய்து வருகின்றனர்.
யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்திலும் இவ்வாரே பிராண்ஸ் வெளிநாட்டு அமைச்சர் மற்றும் பர்ணாட் குவான்கர் எனும் இரண்டு வெளிநாட்டு அமைச்சர்களைக் கூட கொழும்புக்கு வந்து ஐனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்திக்க முற்பட்டனர். அத் தருணத்தில் ஐனாதிபதி கொழும்புக்கு வெளியே சென்று எம்பிலிப்பிட்டியவில் தங்கி நின்று அவர்களை அங்கு அழைத்து வரும் படி ஐனாதிபதி உத்தரவிட்டு இருந்தார். அவர்களை வெரும் திறந்த அரங்கில் ஒரு மரத்திற்கு கீழ் இருக்கச் சொல்லியே ஐனாதிபதி அவர்களை சந்திதது கொழும்புக்கு வழியனுப்பி வைத்தனர். அவர்கள் யுத்ததினை நிறுத்துவதற்கும் மேலும் அவர்கள் விதித்த நிர்பந்தங்களுக்கும் ஜனாதிபதி தலைசாய்க்கவில்லை. அந்த சம்பவ வடுக்கள் இன்னும் அவர்களது நெஞ்சில் இருந்து அகல வில்லை. அது மட்டுமல்ல அமேரிக்கா சரத்பொண்சேகாவை ஐனாதிபதியாக்கி இந்த அரசை கவிழ்ப்பதற்கு பெரும் திட்டம் தீட்டி அவருக்குத் தேவையான நிதி ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.
எதிர்வரும் மார்ச் மாதத்தில் அமேரிக்கா ஐ.நாடுகள் மணித உரிமைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக யோசனைகள் கொண்டு வந்து சர்வதேச நீதிமன்றத்தில் அதனை பரிசிலீப்பதற்கு சில அதிகாரிகளை நியமித்து அதனை அமுல்படுத்தி 2015ல் ஐனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை தடுத்து நிறுத்தி இந்த அரசை இல்லாமல் செய்வதற்கே அமேரிக்காவின் ஒபாமாவின் பிரநிதிகள் திட்டம தீட்டி வருகின்றனர். அதன் பின் இந்த நாட்டின் இரானுவத்தினரையும் யுத்த நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வழங்குவதற்கே இவர்கள் முயற்சிக்கின்றனர். எனவும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.






ReplyDeleteநாட்டிற்குள் உம்மாலும், உம்மை போன்ற இனவாத தலைவர்களால் எவ்வளவோ பிரச்சினை ?
சார் பாரக் ஒபமாவின் தூக்கப் பிரச்சினைக்கு நமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் நல்ல மருந்து உண்டாம்; பாவித்தால் நின்று கொண்டே தூங்கலாமாம்.
முடிந்தால் அம்மருந்தில் கொஞ்சம் நீங்களும், பொதுபல சேனாவும் மற்றும் பாரக் ஒபாமாவும் பாவித்து பார்க்கலாம் .
அட்லீஸ்ட் உள்நாடிலாவது அமைதி நிலவும்.