கத்தார் நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மீலாத் விழா
எங்கள் உயிரினும் இனிய கண்மணி நாயகம் முஹம்மது முஸ்தபா ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அன்னவர்களின் அருள் நிறைந்த புனித பிறப்பை கொண்டாடி மகிழுமுகமாக வழமைபோன்று கத்தார்-ஹுப்புல் பத்ரிய்யீன் பேரவை ஏற்பாடு செய்துள்ள மாபெரும் மீலாதுந்நபி விழா கொண்டாட்டங்கள் இன்ஷா அல்லா எதிர்வரும் 25-01-2013 அன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, கத்தார் நாட்டில் வாழும் எமது நாட்டு சகோதரர்களுக்கு தெரியப்படுத்தும் செய்தியை இத்துடன் இணைத்துள்ளேன். எனவே, பெருமானாரின் அருள்வேண்டி மேற்படி தகவலை மக்கள் அபிமானம் வென்ற தங்களது இணையத்தளத்தில் வெளியிட்டு உதவுமாறு மிக்க அன்புடன் வேண்டுகிறேன்.
M.H முஹம்மத் அஸாஹிம்
செயலாளர்,
ஹுப்புல் பத்ரிய்யீன் பேரவை,
தோஹா - கத்தார்.

நபியுடைய பிறந்த தினத்தை முன்னிட்டு இவர்கள் நடாத்தும் இந்த மௌலிதுகள் கிறிஸ்தவர்களுக்கு ஒப்பான செயலாகும். முஸ்லிம்களின் அறியாமையின் காரணத்தால் அல்லது வழி கெடுக்கும் உலமாக்களால் ஒவ்வொரு வருடத்தின் ரபீஉல் அவ்வல் மாதத்திலும் நபி (ஸல்) அவர்களின பிறந்த தினத்தை முன்னிட்டு இவ்வாறான விழாக்கள் கொண்டாடப்படுகின்றது.
ReplyDelete‘மர்யமின் மகன் ஈஸாவை நஸாறாக்கள் அளவு கடந்து புகழ்வதைப் போன்று என்னைப் புகழாதீர்கள், நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடியான், (என்னை) அல்லாஹ்வின் அடியார், தூதரென்று மாத்திரமே சொல்லுங்கள்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).
மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை யாவும் பித்அத் களாகும் , பித்அத்கள் யாவும் வழிகேடுகளே , அவை நரகத்திற்கே இட்டு செல்லும்...
மீலாத் விலா கொண்டாடல், பற்றி மார்க்க மேதைகளிடம் கருத்து வேற்றுமை உள்ளது. அதிலும் திருக் கொடியேற்றம் என்றால் என்ன? சலவாத்து முழக்கம் என்றல் என்ன? பெருமானாரின் அருள் வேண்டி என்றல் என்ன? என்பது தெளிவில்லாமல் இருக்கிறது.
ReplyDeleteஅத்துடன் 'ஹுப்புல் பத்ரியீன்' என்பவர்கள் அத்வைதம் பேசும் காத்தான்குடி ரஊப் மவ்லவியின் அத்வைத வாதிகளே என்பதும் கட்டரில் வாழும் இலங்கை முஸ்லிம்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய விடயமாகும்.
எங்கள் கண்மணி நாயகத்தின் அருள் நிறைந்த பிறப்பு முஸ்லீம்களாகிய எமக்கு மகிழ்ச்சியானது. ஏனைய அனைத்து விழாக்களையும் விட கொண்டாடுவதற்கு மிகவும் தகுதியானது.
ReplyDeleteவானுயர ஓங்கட்டும் பெருமானார் புகழ். வாழ்க மீலாத் விழாக்கள் !
jaffna முஸ்லிம் இனைய தலம் இவாறான பிதுஅத் ஹளெய் பிரசுரிப்பது மிக கீழ்த்தரமாக எண்ணுகிறோம் இந்த நிகழ்வுக்கு police பாதுகாப்பு ஏற்பாடு செய்வதுக்கு fanar இடம் போட்டு கொடுபதுகு இது போதும்
ReplyDeleteankayum aarampichadunhala??
ReplyDeleteசகோதரர் மபாஸ் அவர்களே! கருத்தை தவறாக புரிந்து அறியாமையில் இருக்கிறீர்கள். என்னை மர்யமின் மகன் ஈசாவைப்போன்று புகழாதீர்கள். என்னை அல்லாஹ்வின் அடிமை என்று சொல்லுங்கள். நபி மொழி சரியானதே! ஆனால் நீங்கள் விளங்கிய விளக்கம்தான் தவறு. அவர்கள் ஈசா அலை அவர்களை இறைவனின் மகன் என்று புகழ்ந்தார்கள். நம் நாயகம் ஸல் அவர்களை யாரும் கடவுளின் மகன் என்றோ அல்லது கடவுள் என்றோ கூறவில்லை. மாறாக மனித குளத்தில் அவர்களின் அந்தஸ்தைத்தான் கவி பாடுகிறோம். கவி பாடுதல் கூடாது என்றோ அல்லது ஒருவரை புகழ்ந்து பேசுதல் கூடாது என்றோ இஸ்லாத்தில் இல்லை. தாராளமாக் புகழலாம்.
ReplyDeleteமீலாதுன்நபி என்பது எம்மை அந்த நபியை அனுப்பி இருள் நீக்கினான் ஒளி பெறச்செய்தான் என்பதை நினைவு கூறுதல். அல்லாஹ்வை புகழ்ந்து அவன் தூதரை பற்றி, அவர்கள் மகிமை பற்றி மக்களுக்கு எடுத்தொம்பல்.
எந்நாளும்தான் புகழலாம் என்று நீங்கள் கேட்கலாம். ஆம் எந்நாளும் புகழலாம். ஆனால் அந்த நேரத்தில், தினத்தில் இந்த வணக்கத்தை செய்தல் தனிச்சிறப்பு.
அரபா நோன்பு , லைலதுல் கதர், மற்றுமுள்ள நினைவு தினங்களைப்போல்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாட்களில் தனக்கோ பிறருக்கோ பிறந்தநாள் கொண்டாடியதில்லை. நபிகள் நாயகத்தின் மீது உயிரையே வைத்திருந்த உத்தமத் தோழர்கள் கூட நபிக்கு பிறந்தநாள் கொண்டாடவில்லை. பிறந்தநாள் கொண்டாடுவது கிறிஸ்தவ கலாச்சாரமாகும். அவர்கள் தான் ஈஸா நபிக்கு (இயேசுவுக்கு) பிறந்தநாள் (கிறிஸ்மஸ்) கொடாடுகிறாகள். கிறிஸ்தவ கலாச்சாரத்தை பின்பற்றுவதை நபிகள் நாயகம் அவர்கள் கடுமையாக எச்சரித்ள்ளார்கள்.
ReplyDelete“யார் பிற சமுதாயத்திற்கு ஒப்பாக நடக்கிறாரோ அவர் அச்சமுதாயத்தையே சேர்ந்தவர் ஆவார்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியூள்ளார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) , நூல் : அபூதாவூத் : 3512
மீலாது விழா ஆரம்பமானது எப்போது?
நபி(ஸல்) அவர்களோ, நாற்பெரும் கலீஃபாக் களோ, மற்ற நபித்தோழர்களோ, அவர்களுக்குப்பின் தோன்றிய தாபியீன்களோ, அல்லது நபி(ஸல்) அவர்களால் போற்றப்பட்ட முந்தைய மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்களோ மீலாது விழா கொண்டாடவில்லை. அப்படியானால் மீலாது விழா ஆரம்பமானது எப்போது? திருக்குர்ஆன் விரிவுரையாளர்களில் ஒருவரான இமாம் இப்னு கஸீர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஹிஜ்ரீ 357 முதல் 567 வரை மிஸ்ரை (எகிப்து) ஆண்டு வந்த ஃபாத்திமியீன்களின் ஆட்சியில் அப்துல்லாஹ் பின் மைமூன் அல் கதாஹ் என்ற யூதனால் இஸ்லாத்தின் பெயரால் பல விழாக்கள் அரங்கேற்றப்பட்டன. அதில் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாவும் ஒன்று. (நூல்: பிதாயா வன் நிஹாயா பாகம் 11 – பக்கம் 172)
ஆக இவ்விழா ஹிஜ்ரீ நான்காம் நூற்றாண்டில் யூதர்களால் அரங்கேற்றப்பட்டுள்ளது.
மீலாத் - நபிகள் நாயகம் காட்டித்தராத மார்க்கத்தில் புகுத்தப்பட்ட நவீன அனுஷ்டானமாகும்.
‘செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வின் வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது(மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்கள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.’ என நபியவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்(ரழி), நூல்: நஸயீ-1560)
மீலாது விழா கொண்டாடக் கூடியவர்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ரபீஅல் அவ்வல் மாதம் 12 தேதி பிறந்தார்கள் என்ற அடிப்படையில் தான் இந்த விழா கொண்டாடப் படுகிறது.ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த தேதியில் தான் பிறந்தார்கள் என்று எந்த ஹதீஸ் நூலிலும் , வரலாற்று புத்தகத்திலும் பதிவு செய்யப் படவில்லை. ஆனால் ரபீஅல் அவ்வல் 12ம் தேதி தான் நபிகளார் இறந்தார்கள் என்பதற்கு ஆதாரமுண்டு. நபியின் பிறந்த தினத்தை கொண்டாடுவதாகச் சொல்லி உண்மையில் இறந்த தினத்தையே கொண்டாடுகிறார்கள். இது நபியை இழிவுபடுத்தும் மாபெரும் பாவமாகும்.
Ivarhaluku Allah vali haatamaatana?
ReplyDeleteNeenga enna sonnalum nanga savi saika matam nanga kondaduvom Engalaithiruthamudiyathu
ReplyDeleteஇது தெவட்டகஹ முதல் கண்டி மீராமக்கம் பள்ளிமுதல் நாடெங்கும் இருக்கும் அவுலியாக்களை ஏற்றி போற்றும் அவுலியாகூட்டத்தின் ஏட்பாடு ராத்திப்பு மஜ்லிஸ் என்பத விளங்காத பாஷையில சொல்லிருக்காங்க போல??? கத்தார்ல இதெல்லாம் நடக்க முன் அனுமதி பெறப்படாவிடின் கண்டிப்பாக இவக பின்மஹ்மூத்ல இருந்து போலிஸ் வண்டியில பயனம் செய்வது உறுதி
ReplyDeleteசகோ. ஜகானி அவர்களே, நான் அறியாமையில் இருக்கிறேனா இல்லையா என்பது எனக்கும் அல்லாஹ்வுக்கும் மாத்திரமே தெரியும் , அனால் நீங்கள் அறியாமையில் இருக்கிறீர்கள் என்பது உலகறிந்த உண்மை.நபிகள் நாயகம் அவர்கள் மீது புகழ் பாடுவது என்ற பெயரில் அல்லாஹ்வோ , நபிகள் நாயகமோ அனுமதிக்காத ஷிர்க்கான காரியங்களில் ஈடுபடுகின்றீர்கள்.அல்லாஹ்வின் தூ தரின் புகழ், மகிமை பற்றி எடுத்தோம்பும் நீங்கள் ஏன் நபியவர்களோ, சஹாபாக்களோ காட்டித் தராத இப்படியான பித் அத்தான காரியங்களில் ஈடுபடுகின்றீர்கள்.நபியவர்களோ , சஹாபாக்களோ அவர்களுடைய பிறந்த நாளை கொண்டாடியதற்கான ஆதாரமே இல்லை.
ReplyDeleteசகோ.ஜஹானி அவர்களே அரபா நோன்பு,லைலத்துல் கத்ர் இரவு போன்ற வணக்க வழிபாடெல்லாம் ரசூலுல்லாஹ் அவர்கள் காட்டி தந்த வழிமுறைகள்.அதைதான் நாம் பின்பற்ற வேண்டுமே தவிர மீலாதுன் நபி விழா என்ற பெயரில் மவ்லீது ஓதுவது போன்ற ரசூலுல்லாஹ் அவர்கள் காட்டி தராத வழிகேடுகளை அல்ல.
அல்லாஹ்தான் உங்களுக்கு நேரான பாதையை காட்ட வேண்டும். அல்லாஹ்வே யாவற்றையும் அறிந்தவன்.