சவூதி அரேபியாவின் ஊழியர் சட்ட விதிகளில் திருத்தங்கள்
சவூதி அரேபியாவின் ஊழியர் சட்ட விதிகளில் குறிப்பிடத்தக்க திருத்தங்களை ஷூரா கவுன்ஸில் எனப்படும் ஆலோசனை மன்றம் அங்கீகரித்துள்ளது. ஊழியர் நலத்துறை அமைச்சகம் இத்திருத்தங்களை முன்வைத்திருந்தது.
அதன்படி, இனி சவூதி நாட்டைச் சேர்ந்த பணியாளர்களுக்கான பயிற்சிக்காலம் மூன்று மாதங்கள் என்பதிலிருந்து ஆறுமாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. சவூதி தேசப் பணியாளர்கள் நன்கு வேலையை கற்றுணர்ந்து பணி செய்ய ஏதுவாக இந்த பயிற்சிக்கால நீட்டிப்பு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தனியார் நிறுவனங்களிலும் வார விடுமுறையை இரு நாள்களாக ஆக்கவும், பணி நேரத்தை 40 மணித் துளிகளாகக் குறைக்கவும் செய்யப்பட்ட பரிந்துரையும் ஏற்கப்ப்ட்டுள்ளது. பணி புரியும் முஸ்லிம் மகளிர் தங்கள் கணவரை இழக்க நேரிட்டால், அதன்பொருட்டு அளிக்கப்பட்டு வந்த 15 நாள் விடுப்பும் 130 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் எப்போது முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்படவில்லை. inneram

Post a Comment