'விஸ்பரூபம்' க்கு எதிராக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் நடாத்தவுள்ள போராட்டம்..!
(மொஹமட் தாஹா மொஹமட் பர்ஸான்)
முஸ்லிம்களையும் , இஸ்லாத்தையும் இழிவு படுத்தும் விதமாய் கமலஹாஸன் நடிப்பில் வெளிவரும் விஸ்பரூபம் திரைப்படம் கொழும்பின் “சினி சிட்டி“ திரை அரங்கில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (25-01-2013) வெளியிடப்படவுள்ளது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அத்திரைப்பட அரங்கை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்துவதென ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் முடிவெடுத்துள்ளது.
எதிர் வரும் வெள்ளி ஜூம்ஆ தொழுகையை அடுத்து, மருதானை சினி சிட்டி திரையரங்கை நோக்கி இம்முற்றுகைப் போராட்டம் முன்னெடுக்கப்படும், இன்ஷா அல்லாஹ். அனைத்து முஸ்லிம்களும் அலை கடலென திரண்டு வந்து தம் எதிர்ப்பை வெளிக்காட்டுமாறு வாஞ்சையுடன் கேட்கிறது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்.

அதென்ன? அனைத்து முஸ்லிம்களும்? மற்றவர்களையும் முஸ்லிம்கள் என்று ஏற்றுக் கொள்கிறார்களே!!!!!!!!! நல்ல மாற்றம்!!! தொடரட்டும்!
ReplyDeleteTawheeth jamathinarukum indiavil muslim talaiwarhalukku thaniyaha padam potu katiyathu polo potukaattaum
ReplyDeleteTawheeth jamathinarukum indiavil muslim talaiwarhalukku thaniyaha padam potu katiyathu polo potukaattaum
ReplyDeleteஅன்பின் தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்களே ........ நீங்கள் செய்வதற்கு முடிவெடுத்திருக்கும் நிகழ்வு நிச்சயமாக அத்திரைபடத்துக்கு இலவச விளம்பரமாக அமையும் இன்றைய சூழல் பல தொழில் நுட்பங்களை கொண்டு அதே படத்தை வீட்டிலேயே பார்த்துவிடலாம். எனவே முஸ்லிம்கள் வெறும் உணர்ச்சி வசப்பட்டவர்கள் என்பதை விட வேறு எதனையும் இதன் மூலம் சாதிக்க முடியாது. சினிமா என்பது ஹலால் இந்த படம் மட்டும்தான் ஹராமா? என பலர் கேட்பது எனக்கும் எட்டியது. உண்மையான முஸ்லிம்களின் நிலை பற்றி ஒரு படம் எடுக்கலாமே அதனை நாம் எல்லோருக்கும் போட்டு காட்டலாமே... உங்கள ஜமாத்துக்கு இலவச விளம்பரம் தேவை எனில் இந்த செயல் பரவாஇல்லை. ஆனால் அல்லாஹ்வுக்காக சிந்தித்து செயல் படுங்கள். இதனைவிட சட்ட ரீதியாக வழக்கு போடலாமே கொஞ்சம் காசு செலவாகும். ...... எமது நாட்டில் திரையிடப்பட்ட ஆயிரகணக்கான திரைப்படங்கள் தமிழ் இங்கிலீஷ் ஹிந்தி என்று மொழி வேறு பாடின்றி இதே மாதிரி முஸ்லிம்களுக்கு எதிரான விடயங்களை சொன்ன போது நாம் எங்கே இருந்தோம்?... இன்று எமது நாட்டில் நாளுக்கு நாள் நடக்கும் முஸ்லிம் எதிரப்பு விடயங்களுக்கு எங்கே உங்கள் ஊர்வலம் போராட்டம் முற்றுகை எல்லாம். முஸ்லிம்கள் முன்மாதிரி சமூகம் என்பதை வேறு மாதிரி மாற்றி விடாதீர்கள். மீண்டும் மீண்டும் சிந்தியுங்கள் இன்றைய எம்நாட்டு சூழலில் இது தேவையா? உங்கள் ஜமாத்தின் பெயர் கேட்டு விடாமல் பார்த்துகொல்லுங்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் பொறுமையையும் நல் எண்ணத்தையும் தந்தருல்வானாக ஆமீன்.
ReplyDeleteஇந்த தவ்ஹீத் ஜெமத்துக்கு இதுவரை எமது நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராகவும், முஸ்லீம் பள்ளி வாயில்களுக்கு எதிராகவும், ஹலால் சம்பந்தமாக விடுக்கப்படும் மிரட்டல்களும் ஊர்வலங்களும்,மற்றும் சொல்லில் அடங்காத பிரச்சினைகளையும் எத்படுத்தி இலங்கை நாட்டு முஸ்லிம்களுக்கு எதிரான சதியில் முழுமூச்சாக ஈடுபட்டு கொண்டு இருக்கும் "போதுபல சேனா" என்ற அமைப்புக்கு எதிராக இவர்களால் என்ன செய்ய முடிந்தது ? ..... அனால் இந்தியாவில் இருந்து வந்த படத்துக்கு இவர்கள் எதிராக போராட்டம் நடத்த போகின்றனர் .....எல்லோருக்கும் அணை திரண்டு வருமாறு கோரிக்கை வேறு ....
ReplyDeleteஹலோ தவ்ஹீத் ஜெமத் தலைவர்களே முதலில் நாட்டுக்குள் இருக்கும் பிரச்சினைக்கு ஒரு சுமுகமான முடிவினை பெற்றுக்கொடுக்க முன்வாருங்கள் அதற்காக முஸ்லிம்களை அமைதி போராட்டத்துக்கு அழையுங்கள் அன்பாக அந்நிய மததவருடன் கலந்து ஆலோசனை பண்ணுங்கள் அவர்களுக்கு உண்மை எது என்று அழகாக எடுத்து கூறுங்கள் .
இதுதான் இப்போதைய ஸ்ரீ லங்கா நாட்டு முஸ்லிம்களுக்கு தேவை .
ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தார் விஸ்வரூபம் படதுக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்யப்போகிறார்களாம் .அதுவும் முஸ்லிம்கள் ஒன்றுகூடும் வெள்ளிக்கிழமையை பயன்படுத்திக்கொண்டு .இவ்வகையான ஆர்ப்பாட்டங்கள் மிக,மிக மலிவான "எதிர்மறைவிளம்பர சூத்திரமாகவே "கருத வேண்டியுள்ளது.இஸ்லாமிய பயங்க்கரவாதமென்பது புளித்துப்போன உதவாக்கரை சொற்பிரயோகம் என்பது யாவரும் அறிவர்.இன்று இலங்கை முஸ்லிம்களுக்கெதிராக விஸ்வரூபம் எடுத்துள்ள பௌத்த பேரினவாதத்தின் நடவடிக்கைகளுக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்யவில்லையே ஏன் ?இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொற்பதமா?அல்லது "அல்லாஹ் என்பது பௌத்த சமயப்படி மூட நம்பிக்கையின் கடவுள்"என்ற சொற்பதமா மீசையை முறு க்க வைக்கும் சொற் பதம் ?களநிலை புரியாமல் மேற்கொள்ளப்படும் போர் வெற்றிபெறமட்டாது.
ReplyDeleteDear Brothers of Islam,
ReplyDeleteI like to share of my suggestion, as you above title of the film not important to Islam brothers because Muslims law what is saying don’t watch films and don’t listen music therefore that film not important to us please you stop your walk on Friday .
Now your walk is not good to Sri Lanka Muslim because Sinhala monks are going pathway have been more different, please understand of Sri Lanka situation
Further, just think about current situation of Sri Lanka what is going on Sri Lanka and what we want to do just think that is enough if you cannot enough time think please pray and ask the Duah with Allah
Allah help to us
Thank you
Your Brother
அன்புக்குரிய தௌஹீத் ஜமா அத்தினரே அஸ்ஸலாமு அலைக்கும்... எமது நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான செயற்பாடுகள் இன்னும் தங்களது கண்களுக்கு தென்படவில்லையா?... இதனைப்பற்றி எப்போது சிந்தனை செய்யவீர்கள். இவ்வாறான ஒரு பதற்ற நிலை எமது நாட்டில் உள்ளது என்பது எத்தனை முஸ்லிம்களுக்கு தெரியும் என நினைக்கின்றீர்கள்... தெரிந்தால் குறைந்தது தங்களது கரங்களையாவது இறைவன்பால் உயாத்துவார்கள் நமது முஸ்லிம் சமூகத்தினர்களுக்ககாக....
ReplyDeleteசகோதரா dharulhudhaladies கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டீர்கள் ....
ReplyDeleteஎதட்கெடுத்தாலும் பத்வா வழங்கும் அவர்கள் அணைத்து முஸ்லிம்கள் என அவர்களின் உறுப்பினர்களை சொல்கிறார்கள் ?
இது அப்படத்தை பார்கத்தூண்டும் விளம்பரமே !
நாட்டில் தற்போது முஸ்லீம்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகளை மறைப்பதற்கு SLTJ எடுக்கும் முயற்சியா இது???
ReplyDeleteஎரியும் நெருப்பில் எண்ணை ஊற்றப்போகிறார்கள்.
ReplyDeleteயானை போயிற்றாம் வால் பொறுத்திட்டாம் என்னும் கதை தான் இது
படத்தின் தலிப்பிற்கு ஏற்றது போல் அது திரையிடப்ப்படுமுன்னே
அதற்குரிய அறிமுக விளம்பரமே இந்த எதிர்ப்புப் போராட்டம்.
அன்பு இஸ்லாமிய சகோதரர்களே! இவர்கள் இவ்வாறு இஸ்லாத்திற்கு எதிராக இயங்குவதால் சில மக்கள் இஸ்லாத்தை தேடிப்படித்து இஸ்லாத்தை ஏற்கும் மக்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றனர்!
அல்லாஹ் நம் அனைவரையும் பாது காப்பானாக.
மற்றும் மாற்று மதத்தவர்களுக்கு இஸ்லாம் பற்றிய தெளிவை கொடுப்பானாக.
ஆகட்டும் ஆகட்டும் தம்பிகளா, அண்ணன் PJ மட்டும் வெளியூர் போகட்டும்.
ReplyDeleteவிஸ்வரூபம் நல்லபடியாக ஓட, உங்கள் பூரண விளம்பர அனுசரணைக்கு நன்றிகள்.
போராட்டம் என்று ஜமாயக்கனும், அடுத்த நாள் சிறிலங்கா பேப்பர்ல எல்லாம் விஸ்வரூபம் பத்தித்தான் தலைப்புச் செய்தி வரணும், சரியா? நல்லபடியா பாத்துகோங்க.
(Dear SLTJ, நம்ம டீல் யாருக்கும் தெரிய வேண்டாம்)