Header Ads



தொடர் மழை - கல்முனை அல்-சுஹறா வித்தியாலயம் வெள்ளத்தில் மூழ்கியது (படங்கள்)



(சௌஜீர் ஏ முகைடீன்)

தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக கல்முனை அல்-சுஹறா வித்யாலயம் ஒரு அடி வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் பாடசாலை மாணவ மாணவிகளின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டிருந்தது. கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இன்று (08.01.2013) நேரில் சென்று பார்வையிட்டு வெள்ள நீரை வெளியேற்ற தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டார்.

குறித்த பாடசாலை வீதியினை விடவும் தாழ்ந்து காணப்படுவதானால் நீர் இறைப்பு இயந்திரம் மூலம் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டது. மேற்படி பாடசாலையின் உள்ளக தாழ் நிலங்களை மண் இட்டு உயர்த்தி தருமாறு அதிபர், ஆசிரியர்கள் முதல்வரிடம்  கேட்டுக் கொண்டதற்கு இணங்க அத்தேவையை பூர்த்தி செய்து தருவதாக முதல்வர் தெரிவித்தார். இவ்விஜயத்தின்போது ஏ.எம்.பறகதுள்ளா உடனிருந்தார்.








1 comment:

  1. May be this water pump should work for more than 2months continously to clear this flood water.
    Hello Mayor,
    Please do somthing practical and useful! you visits will not solve the problems of sufferings.

    Kamran

    ReplyDelete

Powered by Blogger.