திருமண கட்டணம் அதிகரிப்பு - சிங்களவர்களுக்கு அநீதி, முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லையாம்
திருமணங்களை பதிவு செய்யும் கட்டணங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் காரணமாக சிங்களவர்களுக்கு அநீதி ஏற்பட்டுள்ளதாக தேசிய சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
புதிய கட்டண திருத்தங்களின் பிரகாரம், திருமண பதிவை மேற்கொள்ளும் சிங்களவர்கள் 5 ஆயிரம் ரூபாவை செலுத்த வேண்டும். முஸ்லிம்கள் ஆயிரத்து 500 ரூபாவை மாத்திரமே செலுத்த வேண்டும் என சங்க சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது. இதன் மூலம் சிங்களவர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் சம்மேளனம் கூறியுள்ளது.
இது குறித்து கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் நாட்டின் சகல பிரஜைகளுக்கும் ஒரே சட்டத்தின் கீழ் செயற்பட வேண்டும் எனவும் சம்மேளம் சம்பந்தப்பட்டவர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Ithu singhlavar perumpanmy enpathal avarkali kovrapaduthum muhamaga perum thokayum muslimkal sirupanmai enpathal siru thokaium aakum..
ReplyDeleteMuslimkalukku koodinaalum pirachchinai,kurainthalum pirachchinai than.
ReplyDeleteLaw college ku admission 78 per athikam enru pirachchinai.
Marriage register fees kuraiwu enru pirachchinaai.Naadu enge pohuthu..?