Header Ads



தாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் உலகில் இந்தியர்கள் முதலிடம்

வெளிநாடுகளில் வேலை பார்த்து, சொந்த நாட்டுக்கு பணத்தை அனுப்புவர்களில், இந்தியர்கள் முதலிடத்தை பிடித்துள்ளனர். கடந்த ஆண்டில், 38 ஆயிரம் கோடி ரூபாயை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளனர். உலக வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த, 2012ம் ஆண்டில், பல வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், தங்கள் தாய்நாடான இந்தியாவுக்கு, 38 ஆயிரம் கோடி ரூபாயை அனுப்பியுள்ளனர். இவ்வளவு அதிக தொகையை, வேறு எந்த நாட்டினரும், தங்கள் நாட்டிற்கு அனுப்பாததால், அதிக பணத்தை பெற்ற நாடு என்ற ரீதியில், இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை சீனா பெற்றுள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் சீனர்கள், 36 ஆயிரம் கோடி ரூபாயை சீனாவுக்கு அனுப்பியுள்ளனர். 

அதற்கு அடுத்த இடங்களில், பிலிப்பைன்ஸ், மெக்சிகோ, நைஜீரியா நாடுகள் உள்ளன. குறிப்பாக, வளரும் நாடுகளில், தெற்காசியா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வடக்கு ஆப்ரிக்க நாடுகள் தான், அதிக அளவில், வெளிநாடுகளில் வேலைபார்க்கும் தங்கள் நாட்டினர் மூலம் ஏராளமான பணத்தை பெற்றுள்ளன.மேலும், வளரும் நாடுகளில் இருந்து ஏராளமானோர் குடியேறும் நாடாக, அமெரிக்கா விளங்குகிறது. 

No comments

Powered by Blogger.