Header Ads



வைரம் பதிக்கப்பட்ட ஏ.கே. 47 துப்பாக்கீ மீட்பு (படம்)



ஹோண்டுராஸ் நாட்டில் உள்ள ஒரு பண்ணையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் தங்க முலாம் பூசப்பட்டு, வைரம் பதிக்கப்பட்ட ஏ.கே.-47 ரக துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்பான வேலைப்பாடுகளுடன் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட அந்த துப்பாக்கியின் மதிப்பு 50 ஆயிரம் டாலர்கள் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

மெக்சிகோவின் போதை மருந்து கடத்தல் கும்பலிடம் இருந்து ஹோண்டுராசில் உள்ள கடத்தல் கும்பலுக்கு கொண்டு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த துப்பாக்கியுடன், 30 ஆயுதங்கள், குண்டு துளைக்காத உடை, 11 கார்கள் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டன. உலகில் கொலைகள் அதிகமாக நடைபெறும் நாடுகளில் ஹோண்டுராசும் ஒன்று. தென் அமெரிக்காவில் இருந்து அமெரிக்காவிற்கு கோகைன் போதை மருந்து கடத்துவதற்கு ஹோண்டுராஸ் முக்கிய வழியாக உள்ளது. 

No comments

Powered by Blogger.