பெண்கள் தமது கைப்பையில் லிப்ஸ்டிக் வைப்பதைவிட, கத்திகளை வைத்துக்கொள்ள வேண்டும்
சிவசேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரே மறைந்ததையடுத்து, செயல் தலைவராக இருந்த அவரது மகன் உத்தவ் தாக்கரே புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பால் தாக்கரேயின் பிறந்த நாளையொட்டி மும்பையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடந்த விழாவில், புதிய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரேவை தலைவராக நியமிக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் ஒருமித்த கருத்தினை தெரிவித்தனர். இதையடுத்து உத்தவ் தாக்கரே நியமனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
லால்பக்கில் நடந்த பால் தாக்கரே பிறந்தநாள் நிகழ்ச்சியில், பெண்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ளும் வகையில் கத்திகள் வழங்கப்பட்டன.‘பெண்கள் தங்கள் பர்ஸ் மற்றும் கைப்பைகளில் லிப்ஸ்டிக் போன்ற பொருட்களை வைப்பதைவிட, மடக்கு கத்திகளை வைத்துக்கொள்ள வேண்டும் என்று பால் தாக்கரே கூறுவார். அரசு, பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கத் தவறியதால் இவ்வாறு கத்திகளை வழங்குகிறோம்’ என்று அக்கட்சியின் தெற்கு மண்டல தலைவர் அஜய் சவுத்ரி தெரிவித்தார்.

Post a Comment