Header Ads



பறவைகளின் தாக்குதலை நிறுத்த புதிய கருவிகள் வருகிறது..!

விமானங்களை, பறவைகள் தாக்குவதை தடுக்கும் புதிய கருவியை, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து அறிவியல் இதழில் கூறப்பட்டுள்ளதாவது,

 விமானப் பாதையில் பறவைகள் குறுக்கிடுவதால், விமான விபத்துகள் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. உலக அளவில் இப்பிரச்னை காணப்படுகிறது. இதனால், கோடிக்கணக்கான வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனைத் தடுக்கும் வகையில், புதிய கருவி ஒன்றை அமெரிக்காவின் லூசியானா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது, மற்ற கருவிகளைப்போல் அதிகமான சப்தம் எழுப்பாமல், சகித்துக் கொள்ளும் அளவிற்கு மட்டுமே சப்தம் எழுப்பும். 

ஆனால், இந்த சப்தத்தால், பறவைகள், விமான ஓடுபாதையின் குறுக்கே வருவது தடுக்கப்படும். இந்த கருவி, விமான நிலையங்கள் மற்றும், பறவைகள் அதிகமாக கூடும், மாசுபட்ட நீர்நிலைகள் அருகே வைக்கப்படும். இது குறித்து, இக்கருவியை தயாரிக்கும் லூசியானாவை சேர்ந்த அதிகாரி அப்டோ ஹுசைனி கூறியதாவது,,

இக்கருவி, காதுகளுக்கு எவ்வித கெடுதலையும் ஏற்படுத்தாது. அதே நேரத்தில், பறவைகளை விரட்டியடிக்கும். இக்கருவியை சோதனை முறையில் பயன்படுத்தியதில் நல்ல பலனை தந்துள்ளது. இக்கருவியை பொருத்துவதன் மூலம், புறாக்களை விரட்டியடிக்க முடியும். அல்லது விமான பாதையிலிருந்து அவற்றை திசைமாறி செல்ல வைக்க முடியும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இப்புதிய கருவி பயன்பாட்டிற்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.