பி.பி.சி. செய்தி நிறுவனத்தில் வாழைப்பழம் சாப்பிட தடை
(மாலை மலர்)
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பி.பி.சி. செய்தி நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு வாழைப்பழம் சாப்பிட்ட பெண் ஊழியர் ஒருவருக்கு திடீரென வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர் சிகிச்சைக்குப்பின் உயிர் பிழைத்தார்.
இதையடுத்து பி.பி.சி. நிறுவனம் ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அதன்படி லண்டன் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பணியின்போது வாழைப்பழம் சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது.

Post a Comment