ஓய்வில்லாத படுகொலைகளின் மூலமாக சிரியா கிழித்தெறியப்பட்டுள்ளது - போப் பெனட்டிக்ட்
சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத்துக்கு எதிராக கடந்த 21 மாதங்களாக பொதுமக்கள் போராடி வருகின்றனர். இதையொட்டி ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 60 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிரியாவின் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இருந்தும் போராட்டம் ஓயவில்லை.
இந்த படுகொலைகளுக்கு 120 கோடி ரோமன் கத்தோலிக்கர்களின் தலைவராக கருதப்படும் மதகுருவான போப் பெனட்டிக்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
180 நாடுகளை சேர்ந்த பிரமுகர்கள் மத்தியில் நேற்று பேசிய போப் பெனட்டிக்ட் கூறியதாவது,
ஓய்வில்லாத படுகொலைகளின் மூலமாக, சிரியா கிழித்தெறியப்பட்டுள்ளது. இதனால், அப்பாவி பொதுமக்கள் சொல்லவொண்ணா துன்பத்துக்கும், துயரத்திற்கும் ஆளாகிப் போய் உள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால், யாரும் வெற்றியாளர்கள் ஆக முடியாது.
மாறாக, அழிவுகளின் களமாக சிரியா ஆகிவிடும். இந்த சூழ்நிலையை மாற்றி, சிரியாவில் அமைதியை நிலவச் செய்ய உலகத் தலைவர்கள் முனைப்பு காட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment