பள்ளிவாசல்கள் பற்றிய விபரங்களை வழங்க 7 நாள் அவகாசம் வழங்கியுள்ள பொது பலசேனா
நாட்டில் உள்ள சகல முஸ்லிம் பள்ளிவாசல்கள் தொடர்பான ழுழு விபரங்களையும் அடுத்த 7 நாட்களுக்குள் தமக்கு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ள பொதுபலசேனா, தவறும் பட்சத்தில் தமது அமைப்பு அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றினை எடுக்கவேண்டி ஏற்படுமெனவும் எச்சரித்துள்ளது.
கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை பொது பலசேனா நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. மேலும் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் பின்வருமாறுஇ
நாட்டில் ஒவ்வொரு நகரங்களிலும் பள்ளிவாசல்களை புதிதாக அமைப்பதற்கு முஸ்லிம்களில் வஹாபிகள் முயற்சிக்கின்றனர். அவை ஜிஹாத்துக்கான பங்கர்களாக பயன்படுத்தப்படவுள்ளன. நாம் பாரம்பரிய முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்லர். ஜிஹாதை ஊக்குவிக்கும் வஹாபி மற்றும் சலபி பிரிவினரின் செயற்பாடுகளையே எதிர்க்கிறோம்.
அல் சபாப் அமைப்புக்கு நிதி உதவி வழங்கும் சவூதி அரேபிய புலனாய்வுத்துறை தலைவரான ஜமான் அல் சஹ்ரானுக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுத்தவர் பிரதமரே. முதலில் எமது நாட்டுப்பிரதமரை நாட்டிலிருந்து விரட்டவேண்டும். ஜமானின் நிதிப்பங்களிப்பிலேயே பீஸ் ரி.வி. இயங்குகின்றது.

முஸ்லிம் விவகார கலாச்சார அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தால் இதை உடனடியாக சொல்லி இருப்பர். முஸ்லிம்கள் விடையத்தில் தலையிட உங்களுக்கு அதிகாரம் தந்தது யார்?
ReplyDeleteஇந்தியாவுக்கு விஜயகாந்.
இலங்கைக்கு இவங்களா?
இதோ பார்ரா கொலம்பஸ் கண்டு புடிச்சிருக்கர் நாட்டில தீவிர வாதி இருக்கிறார்கள் என்று. வடக்குல 30 வருசமாக யுத்தம் இருந்த போது இவர்கள் நாட்டுக்காக உயிரைக்கொடுத்து போராடி இருக்கலாமே இவர்கள்! இப்போ வந்து FILM காட்டுற என்ன விசையம் பொதுபலசேனாவுக்கு யாரு நிதி தாறது?
அன்பார்ந்த முஸ்லிம் அன்பர்களே! நான் ஏற்கனவே சொல்லி விட்டேன் இந்த முஸ்லிம் எதிர்ப்பாளர்களுக்கு ஈரானின் நிதி உதவி சில இயக்கங்கள் மூலம் வந்தடைகிறது என்று., இன்னும் சில காலங்கள் சென்றால் இவர்களை அல்லாஹ் வெளிப்படுத்துவான் அது வரை பொறுப்போம். சூழ்ச்சிகாரனுக்கெல்லாம் சூழ்ச்சிகாரணாகிய அல்லாஹ்வின் சூழ்ச்சியை அறிந்து கொள்ள காத்திருப்போம்.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteஇவர்களது பிரச்சினைதான் என்ன ?, இவர்களுக்கு என்ன தேவை ?, யா அல்லாஹ், உன்னுடைய அடியார்கள் இறைஞ்சுகிறோம், எங்களைப் பாதுகாப்பாயாக. அருள்மறையில் எங்களைப் பாதுகாப்பவன் நீதான் என்று கூறியிருக்கிறாய் நாயனே,
"4:45 وَاللَّهُ أَعْلَمُ بِأَعْدَائِكُمْ ۚ وَكَفَىٰ بِاللَّهِ وَلِيًّا وَكَفَىٰ بِاللَّهِ نَصِيرًا
4:45. மேலும், அல்லாஹ் உங்கள் பகைவர்களை நன்கு அறிவான்; (உங்களுக்குப்) பாதுகாவலனாக இருக்க அல்லாஹ் போதுமானவன்; (உங்களுக்கு) உதவியாளனாக இருக்கவும் அல்லாஹ் போதுமானவன்."
முஸ்லிம்களும் அதிகம் பாவம் செய்கிறார்கள், யாவரும் ஓர் நிழலில் ஒன்றுபடுமாறு ஆக்குவாயாக.
இனிமேலும் எங்களைத் துன்புறுத்துபவர்களை நீ நிதானப்படுத்துவாயாக.
ஆமின்
Bodu Bala Sena அமைப்பும் ஒரு பயங்கர வாத அமைப்பாக இருக்கிறது! இவர்கள் யார்? ஏன் இவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் அரசாங்கம் எடுக்க தவறுகிறது? இவர்களுக்கு பின்னால் அரசாங்கம் உள்ளது என்று எங்களக்கு ஒரு சந்தேகம்.
ReplyDeleteஇவர்களின் முயற்சியானது முஸ்லிம்களை வியாபார ரீதியாக முடக்குவதுதான். இதற்கு அரசு ஆதரவு இருக்கு என்பது தெளிவு. எனவே இதற்கு அனைத்து முஸ்லிகளும் ஒன்று சேர்ந்து இந்த விடையத்தில் அரசு ஒரு முடிவுக்கு வரும்வரை கடையடைப்பு போராட்டம் நடத்தி இப்பிரச்சனையை உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும்.
ReplyDelete