பார்வையற்றோர் T-20 உலகக் கோப்பை கிரிக்கெட் - பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா
பார்வையற்றோர் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
பார்வையற்றோருக்கான முதல் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பெங்களூரில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது.
இந்திய அணி 20 ஓவரில் 258 ரன்கள் எடுத்தது. கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான் 9 விக்கெட்டுக்கு 229 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.

Post a Comment