ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஜனாதிபதி இன்று சந்திப்பு!
(எம்.ஜே.எம். தாஜுதீன்)
ஊடக நிறுவனங்களின் பிரதானிகளையும் செய்தி ஆசிரயர்களையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று 13-12-2012 அலரிமாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார்.
பிரதம நீதியரசர் தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையை ஆராயவென அமைக்கப்படவுள்ள சுயாதீனக்குழு பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு ஒருபோதும் சவால் விடுப்பதாக அமையாது என ஜனாதிபதி இக்கலந்துரையாடலின்போது தெரிவித்தhர்.
சுயாதீன குழுவிற்கு நிபுணர்கள் சிலரை நியமித்து- அவர்கள் வெளியிடும் அறிக்கையை கவனத்தில் கொண்டு பிரதம நீதியரசர் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி கூறினார்.
அமைச்சர் அநுரபிரியதர்ஷன யாப்பா உட்பட முக்கிய அமைச்சர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.


Post a Comment