கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக் கழகத்தின் 33வது வருடாந்த பொதுக் கூட்டம்
(அபுதீனா)
கிழக்கு மாகாணத்தின் முன்னனி கழகங்களில் ஒன்றான கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக் கழகத்தின் 33வது வருடாந்த பொதுக் கூட்டமும், 2013-14 க்கான புதிய நிர்வாக உறுப்பினர் தெரிவும் நேற்று இரவு கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலய கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
கழகத்தின் பொதுச் செயலாளர் எம்.ஐ.எம் .அப்துல் மனாப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் மாகான சபை உறுப்பினர் கே.எம்.ஏ.ஜவாத் பிரதம அதிதியாகவும், அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவரும், கழகத்தின் சட்ட ஆலோசகரும், கல்முனை மாநகரசபை உறுப்பினருமான சட்டத்தரணி ஏ.எம்.ரகீப், கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எச்.எச்.எம்.நபார், கல்முனை கார்மல் பாத்திமா கல்லூரி அதிபர் அருட்சகோதரர் எம்.ஸ்டீபன் மெத்திவ், சிரேஷ்ட சாரண மாவட்ட ஆணையாளரும், விளையாட்டு போதனாசிரியரும், விரிவுரையாளருமான எம்.ஐ.எம்.முஸ்தபா ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்துகொண்டனர்.
கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எச்.எச்.எம்.நபாரின் நிதியின் மூலம் பெறப்பட்ட ஒலிபெருக்கி சாதனங்கள் மற்றும் முன்னாள் மாகான சபை உறுப்பினர் கே.எம்.ஏ.ஜவாதின் நிதியில் பெறப்பட்ட உதைப்பந்தாட்ட காலணிகள் என்பன கழகத்துக்கு வழங்கிவைக்கப்பட்டது.
இதன்போது அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளராக தொடர்ச்சியாக 17 வருடங்கள் கடமையாற்றிய மெரிகோல்ட் இப்ராகிம் மற்றும் சனிமௌன்ட் விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவர் யூ.எல்.எம்.ஹனீபா (ஜே.பி) ஆகியோருக்கு பொன்னாடைகளும் போர்த்தி கௌரவிக்கப்பட்டன.






Post a Comment