காலித் மன்ற ஏற்பாட்டில் வருமானம் குறைந்த மாணவர்களுக்கு உதவி
(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
காலித் மன்றத்தின் ஏற்பாட்டில் வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு இலவச அப்பியாசப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (15) மாளிகாவத்தை இஸ்லாமிய நிலையத்தில் காலித் மன்றத்தின் நிர்வாக பணிப்பாளர் இம்ரான் காலித் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக கலந்து கொண்ட கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் டைட்டஸ் பெரேரா மாணவி ஒருவருக்கு புத்;தகங்ளை வழங்குவதை படத்தில் காணலாம் அருகில் கௌரவ அதிதியாக கலந்து கொண்ட சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் பணிப்பாளர் ஹாசிம் உமர், மன்றத்தின் பணிப்பாளர் இம்ரான் காலித், முக்கிய பிரமுகர்களையும் பயனாளிகளையும் படங்களில் காணலாம்.





Post a Comment