அட்டாளைச்சேனை ஸூஹாரா இஸ்லாமிய ஆங்கில பாலர் சிறுவர்களின் விடுகை விழா
(எம்.ஐ.முஹம்மட் பைஷல்)
அட்டாளைச்சேனை ஸூஹாரா இஸ்லாமிய ஆங்கில பாலர் பாடசாலை ஆரம்ப நிலை சிறுவர்களின் இரண்டாவது விடுகை விழா நிகழ்வு அண்மையில் அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றபோது.
இந்த விடுகை விழா ஸூஹாரா இஸ்லாமிய ஆங்கில பாலர் பாடசாலை நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் குசும் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரத அதிதியாக மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை கலந்து கொண்டு சிறப்பித்தார்.
ஆரம்ப நிலை சிறுவர், சிறுமிகள் பல பேச்சுப்போட்டி, பாடலுக்கான நடன நிகழ்வு, வினோத உடை நாடகங்கள் போன்ற நிகழ்வுகளில் ஈடுபட்டு தங்களது திறைமைகளை வெளிக்காட்டினர்.
இந்த விடுகை விழா நிகழ்வில் எல்லாச் சிறுவ, சிறுமிகளும் தங்களுக்கென்று எடுத்துக்கொண்ட பாத்திரங்களை மிகத் திறன்பட செய்து காட்டினர். இவ்வாறு செய்து காட்டிய இந்தச் சிறுவர்களை பிரதம அதிதி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை பாராட்டி பரிசில்கள் வழங்கி கௌரவித்தார்.
இச்சிறுவர்களுக்கு பல போட்டி நிகழ்வுகளை கொடுத்து அந்தந்த நிகழ்வுகளில் எவ்வாறு ஈடுபடவேண்டும் என்ற பணியினை முன்னெடுத்து வந்த ஸூஹாரா இஸ்லாமிய ஆங்கில பாலர் பாடசாலையின் நிருவாக முகாமைத்துவப் பணிப்பாளர் குசும் உள்ளிட்ட ஆசிரியர் குலாமினரையும் அமைச்சர் பாராட்டி கௌரவித்தும் பரிசில்களும் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ், ஆயூர்வேத வைத்தியர் ஐ.எல்.அப்துல்ஹைய், சமூக சேவையாளரும் அட்டாளைச்சேனை பிரதேச அனைத்து விளையாட்டுக் கழகங்களின் விளையாட்டுக் கழக சம்மேளன தலைவர் ஹம்ஸா சனூஸ் மற்றும் பல கல்விமான்களும், சிறுவர்களின் பெற்றோர்கள், தாய்மார்கள் என பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சிறுவர்களின் போட்டி நிகழ்வுகளை கண்டு கழித்தனர்.







Post a Comment