கிழக்கு முதலமைச்சருடன் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் சந்திப்பு (படங்கள்)
(ஏ.எல்.றபாய்தீன்பாபு)
திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் செயற்குழு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் அவர்களை வெள்ளிக்கிழமை அவரது அலுவலகத்தில் சந்தித்து மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவை 2013ஆம் ஆண்டு விமர்சையாகக் கொண்டாடுவது சம்மந்தமாக கலந்துரையாடியது.
இதன்போது முதலமைச்சர் தெரிவிக்கையில் கிழக்கு மாகாண சபை இதற்கான அனுசரனை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும் வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை ஏற்கனவே இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.இம்மாதம் 30ஆம் திகதி நடைபெறும் மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் பத்தாவது ஆண்டுப் பொதுக்கூட்ட முதலாவது அமர்வில் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்க தமது பூரண சம்மதத்தை முதலமைச்சர் தெரிவத்தார்.கிழக்கு மாகாண எதிர்க்கட்சித்தலைவர் சி;.தண்டாயுதபாணியும் கலந்து சிறப்பிக்கவுள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது. மூவினத்தவர்களையும் ஐக்கியத்துடன் ஓன்றினைத்து திருகோணமலை மாவட்டத்தில் செயல்படும் ஒரேயொரு ஊடகசங்கமாகும் இச்சந்திப்பில் தலைவர் ஏ.எல்.றபாய்தீன்,செயலாளர்.எஸ்.கீதபொன்கலன், முன்னால் தலைவர்.சி.சசிகுமார். உறுப்பினர் இஸ்மத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment