பாலமுனை கிராமத்தில் பெண் தூக்கில் தொங்கிய நிலையில் ஜனாஸாவாக மீட்பு
(ரீ.கே.றஹ்மத்துல்லா)
அம்பாறை மாவட்டம்-பாலமுனை கிராமத்தில் இளம் பெண்ணின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு.
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேசசெயலகப்பிரிவுக்குட்பட்ட பாலமுனை கிராமத்தசைசேர்ந்த இளம் குடும்பப் பெண் கழுத்தில் சுருக்கிட்டு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இன்று மாலை 13-12-2012 அக்கரைப்பற்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாது- மீட்கப்பட்ட பெண் பாவின் வயது (26) சம்மாந்துறை பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவராவார். இவர் சுமார் மூன்று மாதங்களாகவே அல்-ஹிதாய பள்ளி வீதி, பாலமுனை- 01ம் பிரிவில் புதிய வீடொன்றை நிர்மானித்துக் கொண்டு தனது நான்கு வயது மகனும், தாயாருடனும் வாழ்ந்து வந்ததாகவும், இவருடைய கனவன் றுமைஸ் என்பவர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அவருடைய புதிய வீட்டு நிர்மான வேலையும் இடம்பெற்று மாலை 4.00 மணியளவில் வேவைலையாட்கள் அங்கிருந்து சென்றுள்ளதாகவும் அறியவருகின்றது. இச்சமபவம் மாலை சுமார் 4.30 மணியளவிலேயே நடைபெற்றிருக்கலாம்மெனவும், தெரிவிக்கப்படுவதுடன் 5.30. மணியளவிலேயே பொலிஸாரினால் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற் கொண்டு வருவதுடன் சடலம் மருத்துவப் பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டுசெல்வதற்கான நடவடிக்கையினையும் மேற்கொண்டுவருகின்றனர்.

இன்னாலில்லாஹி வயின்னாஹ் இலைஹி ராஜியூன்
ReplyDelete