Header Ads



''புதிய பள்ளிவாசல்களுக்கு எதிர்ப்பு'' - 'பள்ளிவாசல்களில் மாத்திரம் குர்ஆன் மத்ரஸா நடாத்து' - ஜனாதிபதி முஸ்லிம்களுக்கு உத்தரவிட வேண்டுமாம்


நாட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் பள்ளிவாசல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாட்டில் இயங்கிவரும் அல்குர்ஆன் மத்ரஸாக்களை பள்ளிவாசல்களில் மாத்திரம் நடாத்துவதற்கு முஸ்லிம் சமூகத்திற்கு ஜனாதிபதி உத்தரவு பிறப்பிக்க வேண்டுமெனவும் வலிறுறுத்தி நாடளாவிய ரீதியில் கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கை தீவிரமாகியுள்ளது.

பௌத்த அமைப்பான குரநாகல் - கல்புர தேசிய சமயங்களுக்கிடையிலான தலைவர் புஞ்ஞானந்த தேரரின் வழிகாட்டலின் கீழ் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் பௌத்த விகாரைகளுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

எமக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி பள்ளிவாசல்கள் குர்ஆன் மத்ரஸாக்கள் என்றே ஆரம்பிக்கப்படுகின்றன.  இது தேசிய ஒற்றுமைக்கு குந்தகமாக அமையும்.  எனவே குர்ஆன் மதரஸாக்கள் ஆரம்பிப்பதற்கான அனுமதியை முஸ்லிம் சமய திணைக்களத்திற்கு வழங்ககூடாது. அதற்கு மாற்றாமாக குறிப்பிட்ட பிரதேச செயலாளர், கிராம ஆலவலர், அருகிலுள்ள புனித தஸ்ரீமத நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட வேண்டும்.


பௌத்த அறநெறி பாடசாலைகள் பௌத்த விகாரைகளிலேயே நடத்தப்படுகின்றன. அறநெறி பாடசாலைகள் என்று கூறப்படும் குர்ஆன் மத்ரஸாக்களும் இவ்வாறே பள்ளிவாசல்களுக்குள்ளேயே நடாத்தப்பட வேண்டும்.

முஸ்லிம் சனத்தொகை வேகமாக அதிகரித்து வருகிறது. முஸ்லிம்கள் திட்டமிட்டு அரசியல் வாதிகளிடமிருந்து உதவிகளை பெற்றுவருகிறார்கள். முஸ்லிம் அரசியல்வாதிகள் அவர்களது இனத்திற்கும், சமயத்திற்கு தேவையான உதவிகளை செய்கிறார்கள். ஆனால் எம்மவர்கள் எமது இனத்திற்கு எதனையும் செய்யவில்லை.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் சமர்ப்பிப்தற்காக சகல விகாரைகள், பௌத்த அமைப்புக்கள், பௌத்த அறநெறி பாடசாலைகள் என்பனவற்றை சேர்ந்தவர்களிடமிருநது கையொப்பங்களை திரட்டி தருமாறும், எதிர்வரும் முதலாம் திகதிக்கு முன்னர் திரட்டிய கையொப்பங்களை தம்மிடம் ஒப்படைக்கும்படியும் புஞ்ஞானந்த தேரர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்,

5 comments:

  1. armmichdan aiyya........ armmichdan aiyya........

    ReplyDelete
  2. Nee unnal mudincha ovvoru veetilum class nadathu. engal valarchiyai Allahvai thavira entha Mahinda wanthalum tadukka mudiyathu.

    ReplyDelete
  3. رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
    “எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!”. 2:250

    ReplyDelete
  4. وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِينَ
    “(எங்கள் இறைவனே!) இந்த காஃபிர்களான மக்களிடமிருந்து உன் அருளினால் எங்களை நீ காப்பாற்றுவாயாக!” 10:86

    ReplyDelete

Powered by Blogger.