சுனாமிக்கு தப்பிய சிறுவன் நீரில் முழ்கி வபாத்
(A d) வெள்ளவத்தை 154/1 தர்மாராம வீதியில் உள்ள சுனாமியால் நிர்க்கத்தியான சிறுவர்களுக்கான இல்லத்தில் உள்ள சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன், சிறுவர் இல்லத்திற்கு அருகில் இருந்த கால்வாயில் தவறுதலாக விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (13) பகல் 01.30 அளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தை அடுத்து கடற்படையினர் குறித்த சிறுவனின் சடலத்தை மீட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் 9 வயதுடைய மொஹமட் மில்நாத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்னாலில்லாஹி வயின்னாஹ் இலைஹி ராஜியூன்
ReplyDelete