சிரியாவில் உள்ள இலங்கையர்களை அழைத்துவர ஏற்பாடு
சிரியாவில் நிலவும் மோதல் நிலைமைகள் காரணமாக அங்கு வாழும் இலங்கையர்களை மீள நாட்டுக்கு அழைத்துவருவதற்கு அவசியமான வசதிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
டமஸ்கஸ் நகரில் 20 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வசிப்பதாக லெபனானில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதுதவிர, சிரியாவின் இலங்கைக்கான தூதரக அதிகாரியை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். அந்த தூதரக அதிகாரியாக சிரியா நாட்டவரே பணியாற்றுவதாக வெளிவிவகாரத்துறை அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அங்கு ஏற்பட்டு வரும் கலவரங்களின் மத்தியில் இலங்கையர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment