யாழ்ப்பாண முஸ்லிம் விவகாரம் குறித்து அமைச்சர் றிசாத்துடன் பிரதிமேயர் ரமீஸ் கலந்துரையாடல்
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
யாழ் மாவட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் அம்மக்களது அடிப்படை தேவைகள் குறித்து யாழ் மாநகர சபையின் பிரதி் மேயர் சட்டத்தரணி ரமீஸ்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீனை 13-12-2012 அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
மீள்குடியேற்றம்,இந்திய விடமைப்பு திட்டம்,மக்களுக்கான வசதி வாய்ப்புக்கள் குறித்து,அமைச்சரிடத்தில் எடுத்துரைத்த சட்டத்தரணி ரமீஸ்,அமைச்சரை யாழ் மாவட்டத்துக்கு விஜயம் செய்யுமாறும் அழைப்புவிடுத்தார்.
எதிர் வரும் மாதத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீன் யாழ்ப்பாணத்துக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். ஈரானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் றிசாத் பதியுதீன் நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment