Header Ads



ஹிரா அமைப்பின் ஏற்பாட்டில் மாணவர்கள், ஆசிரியர்கள் கௌரவிப்பு (படங்கள் இணைப்பு)


கற்றல், கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபட்டிருபவர்களுக்கு உதவி வரும் ஹிரா அமைப்பு அண்மையில் புத்தளத்தில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றில் பலநூறு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கியதுடன், ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

பாடசாலை மட்ட மற்றும் தேசிய பரீட்சைகளில் சிறப்பு திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும் இதன்போது பாராட்டு தெரிவிக்கப்பட்டு, பரிசில்களும் வழங்கப்பட்டன.

ஹிரா அமைப்பின் ஸ்தாபக உறுப்பினர்கள் டாக்டர் ரம்ஸி, அமீன் உள்ளிட்டவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் உலமாக்களும் கௌரவிக்கப்பட்டனர்.

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்திலும், அதனையண்டிய பகுதிகளிலும் வாழ்ந்துவரும் வடக்கு முஸ்லிம்கள் மற்றும் யாழ்ப்பாண மாணவர்களின் கல்வி நலனுக்காக செயற்பட்டு வரும் ஹிரா அமைப்பின் இந்நிகழ்வில் கல்வியலாளர்கள், பிரதேச சமூக முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலந்து கொண்டதுடன், சிறப்பு விருந்தினர்களின் விசேட உரைகளும் நடைபெற்றன.

























No comments

Powered by Blogger.