3 குழந்தைகளாவது பெற்றுக்கொள்ளுங்கள் - ரஷ்ய ஜனாதிபதி வேண்டுகோள்
ஒரு குடும்பத்துக்கு, மூன்று குழந்தைகளாவது இருக்க வேண்டும்,'' என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், வற்புறுத்தியுள்ளார். ரஷ்ய பார்லிமென்ட்டில், அதிபர் புடின் உரையாற்றினார். அப்போது அவர் குறிப்பிடுகையில்,
"12 ஆண்டுகளாக, ரஷ்யாவின் மக்கள் தொகை குறைய ஆரம்பித்து விட்டது. மக்கள் தொகை அதிகரித்தால் தான், பல விஷயங்களில் நாம் முன்னேற முடியும். எனவே, ஒவ்வொரு குடும்பத்துக்கும், குறைந்த பட்சம் மூன்று குழந்தைகளாவது இருக்க வேண்டும்' என்றார்.
ரஷ்யாவில் மக்கள் தொகை சரிந்ததால், இரண்டாவது குழந்தை பெறுபவர்களுக்கு, கணிசமான நிதி உதவி, கல்வி உதவி தொகை, வீட்டு வசதி ஆகிய சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம், ரஷ்யாவில், இந்த ஆண்டு மக்கள் தொகை, சற்று அதிகரித்துள்ளது.

Post a Comment