அமெரிக்கா துப்பாக்கி சூட்டுக்கு காரணம் என்ன..? இவன்தான் கொலையாளி..!
அமெரிக்க பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள சாண்டி ஹூக் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 28 பேர் பலியானார்கள். இந்நிலையில், துப்பாக்கிச்சூடுக்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதன் விவரம் வருமாறு,
நியூயார்க் நகரில் இருந்து 90 கி.மீட்டர் தூரத்தில் இருக்கும் கனெக்டிகெட் நகரிலுள்ள சான்டிஹுக் தொடக்க பள்ளியில் டீச்சராக பணியாற்றி வந்தவர் நான்சி லேன்சா. இவரது மகன் ஆடம் லேன்சா (20) இவனுக்கு தனது தாய் மீது கோபம் இருந்தது. இதன் காரணமாக அவரை தீர்த்துக் கட்டும் ஆவேசத்துடன் முகமூடி கொண்ட கறுப்பு உடைகளை அணிந்து கொண்டான். அவர் டீச்சராக வேலை செய்யும் பள்ளிக்கு அவரது தாயாரின் காரிலேயே ஆடம் சென்றான். காரின் உள்ளே ஒரு துப்பாக்கி, தனது உடைக்குள் 2 துப்பாக்கிகள் என 3 துப்பாக்கிகளை தன்னுடன் கொண்டு சென்ற அவன் முதலில் தனது தாயாரை சுட்டுக் கொன்றான்.
பின்னர் ஆவேசம் அடைந்த ஆடம் பள்ளியில் இருந்த குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டு சாய்த்தான். அதன் பிறகும் கொலைவெறி தணியாமல், வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த டீச்சர்களையும் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றான் என ஒரு தகவல் தெரிவிக்கிறது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த குழந்தைகளில், கொலையாளியின் குழந்தையும் ஒன்று என பாக்ஸ் செய்தி நிறுவனம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது.
இன்னொரு செய்தி நிறுவனம், தனது தாயாரை அவர் வீட்டில் வைத்து, முகத்தில் சுட்டுக் கொன்ற பின்னர் தான், பள்ளிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினார் என தெரிவிக்கின்றது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் ஈடுபட்டிருக்கக் கூடும் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக ஆடம் லேன்சாவின் அண்ணன் தியான் லேன்சாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Post a Comment