'இதயம் உடைந்துவிட்டது' - ஒபாமா கண்ணீர் விட்டு அழுகை - அமெரிக்கா முழுவதும் சோகம்
அமெரிக்காவின் கனெக்டிகட் நகரில் உள்ள சாண்டிஹுக் பள்ளியில் மர்ம நபர் ஒருவன் துப்பாக்கிச் சூட்டில் 20 குழந்தைகள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர். இந்த கோரச் சம்பவத்தினால் அதிர்ச்சியடைந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, வரும் 18ம் தேதி வரை தேசிய கொடிகளை அரை கம்பத்தில் பறக்க விட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அதிபர் ஒபாமா உரையாற்றினார். தனது பேச்சுக்கு இடையில் நான்கைந்து முறை நாதழுதழுக்க பேச முடியாமல் தடுமாறிய ஒபாமா, கண்களில் பெருக்கெடுத்த கண்ணீரை கட்டுப்படுத்த முயற்சித்தார். எனினும் ஓரிரு முறை விழிகளின் ஓரம் வழிந்த கண்ணீரை விரல்களால் துடைத்தபடி ஒபாமா பேசியதாவது:-
நமது இதயங்கள் நொறுங்கிப் போய் உள்ளன. இந்த சம்பவத்தில் தங்கள் குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோருக்கு தேசத்தின் சார்பில் நமது ஆழ்ந்த இரங்கலை கன்னெடிக்ட் மாகாண கவர்னரின் மூலமாக நான் தெரிவித்துள்ளேன். இந்த கொடிய குற்ற சம்பவம் குறித்த விசாரணையில் மாகாண கவர்னருக்கு தேவையான எத்தகைய ஒத்துழைப்பையும் வழங்கவும், பலியான குழந்தைகளின் பெற்றோர்களுக்கு நிவாரணம் அளிக்கவும் அரசு தயாராக உள்ளது.
இதுபோன்ற கொடிய சம்பவங்கள் நடந்த போதெல்லாம் நான் இந்த நாட்டின் அதிபர் என்ற முறையில் அல்லாமல், ஒரு குழந்தையின் பெற்றோர் என்ற மனநிலையில் வேதனையடைந்துள்ளேன். இன்றும் அதே வேதனையை நான் மிக அதிகமாக உணர்கின்றேன். இன்றைய சம்பவத்தில் 5 முதல் 10 வயதுக்குட்பட்ட அழகான சின்னஞ்சிறு மழலைகளை நாம் இழந்துள்ளோம். அவர்களுக்கென்று ஒரு வாழ்க்கை காத்திருந்தது.
பிறந்த நாள் பட்டமளிப்பு விழா, திருமணம், குழந்தைகள் என அவர்களுக்காக வாழ்வின் சில இனிய தருணங்கள் காத்திருந்தது. இவற்றில் எதையுமே சந்திக்காமல் இந்த கொடூர சம்பவத்தில் பலியாகிவிட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு, உறவினர்களுக்கும் ஆறுதல் கூற முடியாமல் நமது இதயங்கள் நொறுங்கிப் போய் கிடக்கின்றன. நமது ஆறுதல் மொழிகளால் தங்கள் குழந்தைகளை பறிகொடுத்துவிட்டு நிற்கும் பெற்றோர்களின் வலியையும், சோகத்தையும் நம்மால் குறைத்துவிட முடியாது.
இன்று இரவு எல்லா பெற்றோர்களைப் போல், நானும் என் மனைவி மிச்சேலும் எங்கள் குழந்தைகளை கட்டி அணைத்து கொஞ்சும் வேளையில்; கனெக்டிக் சம்பவத்தில், தங்கள் குழந்தைகளை இழந்தவர்கள் எவ்வளவு வேதனைப்படுவார்கள் என்பதை நான் எண்ணிப் பார்க்கிறேன். இதை போன்ற பல கோர தாக்குதல்களை நாம் கடந்து வந்துள்ளோம்.
ஆரகானில் ஷாப்பிங் மால் மீது நடந்த தாக்குதல், விஸ்கான்சின் கோயில் மீது நடந்த தாக்குதல், அரேரா சினிமா தியேட்டர் மீது நடந்த தாக்குதல், தற்போது சாண்டி ஹுக் பள்ளி மீது நடந்த தாக்குதல் என எந்த தாக்குதல் சம்பவமானாலும் இதில் பலியான குழந்தைகள் எல்லாம் நமது குழந்தைகள் தான். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இதை போன்ற துயரச் சம்பவங்கள் நிகழா வண்ணம் தடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் அரசியல் பார்க்காமல், அமெரிக்கர்களாக ஒன்றுபட்டு நாம் செயலாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

we also feel the same Mr President!! Our thoughts and prayers are with you at this time. We are sorry for your loss, but you don't feel the pain while you and your weapons kills children in Iraq Afganisthan Palestine Siriya and all over the world???
ReplyDeleteஏன் மிஸ்டர் ஒபாமா நீங்கள் பலஸ்தீனில்,ஆப்கானிஸ்தானில் உங்கள் இராணுவத்தால் படுகொலை செய்யப்படும் பச்சிளம் குழந்தைகளை பற்றி ஏன் உங்கள் மனதில் வேதனை ஏற்படுவது இல்லை ஏன் அவர்களுக்கு வாழ்வில் இனிய தருனங்கள் இல்லையா ? ??????????????
ReplyDeleteஉண்மையில் எமது மனமும் பரிதளிக்கின்றது எல்லாம் இறைவன் தந்த குழந்தைகள் உயிரை பறிக்க வேறு யாருக்கும் உரிமை கிடையாது . ""ஆனால் ஒன்றை மற்றும் விளங்கி கொள்ளுங்கள் படைத்த இறைவன் எதோ ஒரு முறையில் தண்டனை தந்தே தீருவான் எவர்களால் அநியாயம் இலக்கபடுகின்றார்களோ அவர்களுக்கும் அதே அநியாயத்துக்கு அளாகுவார்கள்""