யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஆரோக்கிய வாழ்விற்கான நடைபவனி (படங்கள்)
தேசிய சுகாதார வாரத்தை முன்னிட்டு ஆரோக்கிய வாழ்விற்கான நடைபவனி இன்றையதினம் யாழ். போதனா வைத்தியசாலை முன்றலில் இருந்து ஆரம்பித்து யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் நிறைவடைந்தது.
இதில் வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்),வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ரவீந்திரன், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி, வைத்திய அதிகாரிகள், தாதியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
கடந்த 9 ஆம் திகதி ஆரம்பமாகிய தேசிய சுகாதார வாரம் எதிர்வரும் 17 ஆம் திகதி நிறைவடையவுள்ளதுடன், இக்காலப்பகுதியில் மக்களிடையே தொற்று நோய் மற்றும் தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Post a Comment