Header Ads



சாதித்து காட்டியது வடகொரியா

வடகொரியா இன்று 12-12-2012 காலை உன்ஹா-3 என்ற நீண்ட தூர ராக்கெட் ஒன்றை ஏவியது. அந்த ராக்கெட்டில் அனுப்பப்பட்ட செயற்கைகோள், விண்ணின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக இணைந்தது என்றும் வடகொரியா கூறியுள்ளது. இதை அமெரிக்காவும் உறுதி செய்துள்ளது.

நீண்ட தூர ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த ராக்கெட் ஏவப்பட்டுள்ளது என்று அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணை சோதனையை ஏற்கனவே வடகொரியா மேற்கொண்டது. இதை தொடர்ந்து, வடகொரியாவின் இரண்டாவது அனுஆயுத சோதனைக்கு ஐ.நா. எதிர்ப்பும் தெரிவித்து இருந்தது.

இப்பிராந்தியத்தில் ஏவுகணை சோதனை செய்து வடகொரியா பயமுறுத்தி வருவது, மிகவும் ஆத்திரமூட்டுவதாக உள்ளது என்று அமெரிக்க எச்சரித்துள்ளது.  ஜப்பானும் இதுகுறித்து அவசர ஆலோசனை கூட்டத்திற்கு ஐ.நா. சபைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. தென்கொரியாவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வடகொரியா இந்த ஏவுகணை சோதனையை நிகழ்த்தியது பற்றி அந்நாடு குற்றம் சாட்டியுள்ளது.

No comments

Powered by Blogger.